அசிங்கப்படும் மாயா.. இப்பதான் மனசே ஆறுதலா இருக்கு.! தெறிக்கவிடும் அர்ச்சனா, தினேஷ்

Bigg Boss season 7 Tamil today promo 2: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்து வருகிறது. அதாவது கடந்த வாரம் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என மாயாவின் ஏஜென்ட் டீம் ரெட் கார்டு கொடுத்து பிரதீப்பை வெளியேற்றியுள்ளனர்.

மேலும் வைல்டு கார்டு என்ட்ரி கொடுத்த ஐந்து போட்டியாளர்களையும் டார்கெட் செய்து வச்சி செய்து வருகிறார்கள். அப்படி முக்கியமாக தினேஷ், அர்ச்சனாவை டார்கெட் செய்து வரும் நிலையில் இதனால் ரசிகர்கள் பூர்ணிமா, மாயாவை விரைவில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்ற வேண்டும் என கூறுகின்றனர்.

பாரதிராஜாவின் உதவி இயக்குனராக மணிவண்ணன் இருந்தபோது.. அரிய புகைப்படம் இதோ

அனைவரையும் எதிர்த்து தினேஷ், அர்ச்சனா, விசித்ரா மூன்று பேரும் இருந்து வருவதால் ரசிகர்கள் மத்தியில் இவர்களுக்கு நல்ல ஆதரவு கிடைத்து வருகிறது. முக்கியமாக அர்ச்சனா தான் தன்னுடைய பாயிண்டுகளை சரியாக எடுத்து வைத்து வருகிறார் எனவே ஆட்டம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.

இந்த சூழலில் பிக் பாஸ் ஹவுஸ் மேட்ஸ்களுக்கு பிக் பாஸ் கொடுத்து இருக்கும் பாஸ்கர் மூலம் அனைவரின் உண்மையான முகம் அனைவருக்கும் தெரிய வந்துள்ளது. அப்படி முதல் ப்ரோமோவில் நிக்சன் அனைவரிடமும் மாட்டிக் கொண்டார் இதனை அடுத்து இரண்டாவது ப்ரோமோவில் மாயா மாட்டிக் கொண்டு என்ன சொல்வது என்று தெரியாமல் முழித்து வருகிறார்.

ஜொலிக்கும் அழகில் ரஜினியின் மருமகள்.! கியூட் போட்டோ ஷூட்..

அதாவது அவரு ஆம்பள இல்லன்னு பீல் பண்றாரா என்ன? என ஜோவிகா பேசியது அனைவருக்கும் தெரிய வந்துள்ளது. இதற்கு ஜோவிகா ரெட் கார்டு அவர் கொடுக்கல அதனாலதான் நான் சொன்னேன் என கூறுகிறார். இவரை தொடர்ந்து ஐஷு, மாயா பிராவோ மேலிருந்து கீழே பார்ப்பதாக பேசியிருந்ததும் தெரியவர நான் எப்ப உங்கள அப்படி பார்த்தேன் என கேட்கிறார். தினேஷ் கேள்வி கேட்க மாயா என்ன சொல்வது என்று தெரியாமல் நின்று கொண்டிருக்கிறார்.