ஜொலிக்கும் அழகில் ரஜினியின் மருமகள்.! கியூட் போட்டோ ஷூட்..

Actress Mirnaa Menon: சோசியல் மீடியாவில் தொடர்ந்து தனது அழகிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதை கவர்ந்து வருபவர் தான் நடிகை மிர்னா மேனன். ஜொலிக்கும் அழகில் இவர் நடத்திய அழகிய புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாக ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

கடந்த 2016ஆம் ஆண்டு வெளியான பட்டதாரி திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான மிர்னா மேனன் தொடர்ந்து சில திரைப்படங்களில் நடித்து வந்தார். ஆனால் அந்த படங்கள் சொல்லும் அளவிற்கு பிரபலத்தை தரவில்லை இந்த சூழலில் தான் கடைசியாக ரஜினி நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை மிர்னா மேனன் பெற்றார்.

Mirna Menon
Mirna Menon

ஜெயிலர் படத்தின் வாய்ப்பு பெரிய திருப்புமுனையாக அமைய ரசிகர்கள் மத்தியில் தனக்கான ஒரு இடத்தை பிடித்துள்ளார். ஜெயிலரில் ரஜினியின் மருமகளாக நடித்த மிர்னா மேனன் தொடர்ந்து அடுத்தடுத்த பட வாய்ப்புகளை பெற்று வருகிறார். அதே சமயம் சோசியல் மீடியாவிலும் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் புடவை, சுடிதார், மாடர்ன் உடை என தனது க்யூட்டான மற்றும் ஹாட்டான புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

Mirna Menon
Mirna Menon

மிர்னா மேனன் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பட்டதாரி படத்திற்கு பிறகு மலையாள, தெலுங்கு படங்களில் நடித்து வந்த இவர் அதன் பிறகு தான் ஜெயிலர் திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பே கிடைத்துள்ளது.

 Mirna Menon
Mirna Menon

அப்படி பட்டதாரி படத்திற்கு பிறகு களவாணி, மாப்பிள்ளை, அண்ணன் உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார் மிர்னா மேனன். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வரும் மிர்னா மேனன் தற்பொழுது சுடிதாரில் க்யூட்டாக இருக்கும் இவருடைய புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

 Mirna Menon
Mirna Menon