பாரதிராஜாவின் உதவி இயக்குனராக மணிவண்ணன் இருந்தபோது.. அரிய புகைப்படம் இதோ

Actor Manivannan: நடிகர் மணிவண்ணன் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய பொழுது எடுத்த அரிய புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் நடிகராகவும், இயக்குனராகவும் பணியாற்றி வந்தவர் தான் மணிவண்ணன். இவருடைய நடிப்பில் வெளியான ஏராளமான திரைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

அந்த வகையில் 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் 50 திரைப்படங்கள் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கிழக்கே போகும் ரயில் திரைப்படத்தின் மூலம் பாரதிராஜாவின் ரசிகராக மாறிய மணிவண்ணன் பிறகு கல்லுக்குள் ஈரம் என்ற படத்தில் பாரதிராஜா நடித்துக் கொண்டிருக்கும் பொழுது பாரதிராஜா உடன இணைந்தார்.

ஜொலிக்கும் அழகில் ரஜினியின் மருமகள்.! கியூட் போட்டோ ஷூட்..

அப்படி பாரதிராஜாவின் திரைப்படங்களில் கதை, வசனம் எழுதுவதையும் தொடர்ந்தார். நிழல்கள், டிக் டிக் டிக், அலைகள் ஓய்வதில்லை மற்றும் காதல் ஓவியம் உள்ளிட்ட தமிழ் படங்களுக்கும் ஹிந்தி, தெலுங்கு போன்ற படங்களிலும் மணிவண்ணன் பாரதிராஜாவுக்கு உதவியாளராக இருந்தார்.

இவர் பாரதிராஜாவிடம் உதவியாளராக இருந்து அனைத்தையும் கற்றுக் கொண்ட மணிவண்ணன் 1982ஆம் ஆண்டு இயக்குனராக அறிமுகமானார். 50 படங்கள் இயக்கி இருக்கும் நிலையில் இதில் 34 திரைப்படங்கள் வெற்றி பெற்று இருந்தாலும் மக்களுக்கிடையே இவருடைய நடிப்புதான் மிகவும் பிரபலமானது.

மொத்தமாக ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன நடிகர் சாந்தனு.. வைரல் புகைப்படம்

எனவே தனது புத்திசாலித்தனத்தினால் தொடர்ந்து சிறந்த தனித்துவமான கேரக்டர்களை தேர்ந்தெடுத்து நடிக்க தொடர்ந்தார். அப்படி சிவாஜி கணேசன், கமல்ஹாசன், ரஜினிகாந்த், சத்யராஜ் முதல் அஜித், சூர்யா வரை பல நட்சத்திரங்களுடன் நடித்துள்ளார் மணிவண்ணன். இவ்வாறு சினிமாவில் ஈடுபட்டு வந்த மணிவண்ணன் ஒரு கட்டத்திற்கு பிறகு அரசியலிலும் ஆர்வம் காட்டி வந்தார்.

actor manivannan
actor manivannan

இந்த சூழலில் கடந்த 2013ஆம் ஆண்டு ஜூலை 15 ஆம் நாள் மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார். ஏற்கனவே இதய அறுவை சிகிச்சையும், முதுகில் தண்டுவட அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டு இருந்தது எனவே சில ஆண்டுகள் படங்கள் இயக்காமல் இருந்து வந்தார்.