பிக் பாஸ் எடுத்துட்டு மாயா பாஸ் என வச்சுக்கலாம்.. பிரதீப்பை விட ஆவேசமாக இறங்கிய அர்ச்சனா

Bigg Boss season 7 Tamil today promo 2: பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வைல்ட் கார்டு என்ட்ரி கொடுத்த அர்ச்சனா வந்ததிலிருந்து கடந்த ஒரு வாரங்களாக அழுது கொண்டே இருந்த காரணத்தினால் கமல்ஹாசன் கடந்த வாரம் அறிவுரை கொடுத்தார். இதனை ஏற்றுக் கொண்ட அர்ச்சனா மிகவும் ஆவேசமாக சரியான பாயிண்டுகளை எடுத்து வைக்க மாயாவுக்கு சரியான போட்டியாக அமைந்துள்ளார்.

மாயா, பூர்ணிமா இருவரும் கேங் ஒன்றை அமைத்துக் கொண்டு மற்ற போட்டியாளர்களை தங்களுக்கு கீழ் நடத்தி வருகின்றனர். அதேபோல் அனைவரும் பிளான் பண்ணி ஸ்மால் பாஸ் வீட்டினை டார்கெட் செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

பிரதீப் இருப்பதனால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை எனக் கூறி ரெட் கார்டு கொடுத்து வெளியில் அனுப்பப்பட்ட நிலையில் இதற்கு எதிராக விசித்ரா, அர்ச்சனா குரல் கொடுத்தனர். எனவே இந்த வார கேப்டன் ஆன மாயா இதிலிருந்து தனது பிரச்சனையை தொடங்கினார்.

இயக்குனராக வெற்றி கண்ட கமல்ஹாசன்.. இதுவரை இயக்கிய திரைப்படங்கள் எத்தனை தெரியுமா.?

இந்நிலையில் பிரதீப் இருந்திருந்தால் கூட மாயா, பூர்ணிமா கேங்கை இந்த அளவுக்கு கதற விட்டிருக்க முடியாது என்று தான் சொல்ல வேண்டும். மாயா ஸ்மால் பாஸ் வீட்டில் இருக்கும் ஹவுஸ் மேட்ஸ்களை அலட்சியப்படுத்தி வரும் நிலையில் இவருக்கு சரியான பதிலடி அர்ச்சனாவும் விசித்ராவும் கொடுத்து வருகின்றனர்.

தற்பொழுது வெளியாகி இருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி இரண்டாவது ப்ரோமோவில் பிக் பாஸ் என்ற பெயர் வைப்பதற்கு பதிலாக மாயா பாஸ் என்று வைத்து இருக்கலாம். நாளைக்கு ஒருவேளை மாயா டைட்டில் வின்னர் ஆகிவிட்டார் என்றால் இத்தனை பேர எமோஷனலாக காலி பண்ணிட்டு இந்த டைட்டிலை பெறுகிறோமே என்ற குற்ற உணர்ச்சி இருக்காதா? 

பாலிவுட் முதல் கோலிவுட் வரை கமல்ஹாசனின் பிறந்தநாள் பார்ட்டிக்கு படையெடுத்து வந்த பிரபலங்கள்.! வைரல் புகைப்படம்..

மாயா கேப்டன் ஆக வந்தால் சரியாக போட்டியாளர்களை ஆண்டில் பண்ணுவார் என்று நினைத்தேன் ஆனால் அவர் இப்படி நடப்பார் என்று நான் நினைக்கவே இல்லை ரொம்ப சீப்பா நடந்து கொள்கிறார். இவர்களெல்லாம் ரெட் கார்ட் வாங்கி போனவருக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என ஆவேசமாக பேசும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.