வசமாக சிக்கிய சூனியக்காரி.. உண்மையை உளறிய கூல் சுரேஷ்.! விசித்ராவிற்கு கிடைத்த கைதட்டல்கள்

Bigg Boss season 7 Tamil today promo 2: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாரம் தோறும் சனி, ஞாயிறு கமல்ஹாசனின் எபிசோடுகளுக்காக ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்து வருவது வழக்கம். அப்படி கடந்த வாரம் போலவே இந்த வாரமும் நடந்த பிரச்சனைகளால் கமல் அடுத்து என்ன சொல்ல போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது.

ஆனால் கமல்ஹாசன் கடந்த வாரம் சொல்லும் அளவிற்கு மாயாவின் ஏஜென்ட் டீமை தட்டி கேட்காதது ரசிகர்கள் மத்தியில் குறையாக இருந்தது. இதனால் இந்த வாரம் கமல் அனைவரையும் தட்டி கேட்பார் என்ற எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லை என்று தான் கூற வேண்டும். இந்த வாரம் கேப்டனாக தினேஷ் தன்னால் முடிந்த வரை பெஸ்ட் கொடுத்துள்ளார்.

90ஸ் ரசிகர்களின் கனவு கண்ணி சுவலட்சுமியா இது… பலருக்கும் தெரியாத தகவல்..

மேலும் அடுத்த வாரம் கேப்டன் ஆகவும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் நிலையில் பூர்ணிமா இரண்டாவது முறையும் கேப்டனானதால் தலைமை பொறுப்பு  புஷ்பம் ஆகிவிட்டது. எனவே இதனை தினேஷ் சரியாக செய்வாரா என்பதை இனிவரும் நாட்களில் தெரிந்து கொள்ளலாம். இதனை அடுத்து இந்த வாரம் ஆண் போட்டியாளர்கள் பெண்ணாகவும், பெண் போட்டியாளர்கள் ஆணாகவும் கேரக்டர் மாறி நடித்து வந்தனர்.

இதில் சில பர்ஸ்னல் டார்கெட்டுகளும் இருந்தது அதனை கமல்ஹாசன் கேட்கும் இன்றைய 2வது ப்ரோமோ மெரியாகியுள்ளது. கமல் விஷ்ணுவிடம் எதற்காக உங்கள் பாத்திரத்தை மாயா எடுத்துக்கிட்டாங்க என்று கேட்க ஏதா இருந்தாலும் நெகட்டிவா இருக்கும் பின்னாடி பேசுவாங்க என்பதை தான் ப்ரொஜெக்ட் செய்தார்கள் என்று கூறுகிறார். இவரை அடுத்து அர்ச்சனா இந்த கேரக்டரை எடுத்து எதற்காக இவ்வளவு பெர்ஃபார்மன்ஸ் பண்ணி இருக்கீங்க என்று கூல் சுரேஷ் சிலரிடம் திட்டு வாங்கியதாக கூற உடனே கமல் யாருகிட்ட திட்டு வாங்க நீங்க என்று கூல் சுரேஷிடம் கேட்கிறார்.

கத்தி பட வில்லனின் மனைவியா இவங்க.. அழகில் ஹாலிவுட் நடிகையை தூக்கி சாப்பிடுறாங்க..

உடனே கொள் சுரேஷ் விஷ்ணு, மணி என்று சொல்லிவிட மணி நாங்க சொல்லல சார் சொன்னது மாயா தான் என்று உண்மையை உடைக்கிறார். பிறகு விசித்ரா என்னுடைய கேரக்டரை நிக்சன் சார் எடுத்தாங்க சார் என்னுடைய அன்பைப் பொய்யான ஒரு விஷயமாக செய்தது உண்மை சார் என்று கூற ஒட்டுமொத்த ஆடியன்ஸ்களும் கைதட்டுகின்றனர்.