90ஸ் ரசிகர்களின் கனவு கண்ணி சுவலட்சுமியா இது… பலருக்கும் தெரியாத தகவல்..

Actress Suvalakshmi: சினிமாவைப் பொறுத்தவரை ஒரு சில நடிகைகள் மட்டுமே தங்களுக்கு 50 வயதை கடந்த பிறகும் முன்னணி நடிகைகளாக கலக்கி வருகின்றனர். ஆனால் ஏராளமான நடிகைகள் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் சினிமாவை விட்டு விலகி திருமணம் செய்துக் கொண்டு செட்டில் விடுகிறார்கள்.

அப்படி 90 காலகட்டத்தில் முன்னணி நடிகையாக கலக்கி வந்த நடிகை சுவலட்சுமி குறித்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சினிமாவிற்கு அறிமுகமான சில காலகட்டங்களிலேயே ரசிகர்கள் மத்தியில் பிரபலமான சுவலட்சுமி1994ஆம் ஆண்டு வெளியான உத்திரன் என்ற பெங்காலி படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார்.

20 வயது ஆவதற்கு முன்பே ஹீரோவாக நடித்த 5 டாப் நடிகர்கள்.! இவன் ஹீரோவா.! கழுவி ஊத்திய மக்கள்

இதனை தொடர்ந்து தமிழில் அஜித்துடன் இணைந்து நடித்த ஆசை படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி பிறகு தொடர்ந்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து பட்டித்தொட்டி எங்கும் பிரபலமானார். ஆசை படத்திற்கு பிறகு கோகுலத்தில் சீதை, கல்கி, காத்திருந்த காதல் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்த இவர் கடைசியாக நதி கரையிலே என்ற படத்தில் நடித்தார்.

Actress Suvalakshmi
Actress Suvalakshmi

குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு பட வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் சின்னத்திரையில் நடிக்க தொடர்ந்தார். அப்படி சன் டிவியில் ஒளிபரப்பான சூலம் என்ற சீரியலில் நடித்திருந்தார். ஒரு கட்டத்தில் சினிமாவில் இருந்து மொத்தமாக விலகிய சுவலட்சுமி கலிபோர்னியா தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.

லேடி சூப்பர் ஸ்டாருக்கே அட்ஜஸ்ட்மெண்ட் தொல்லை இருந்துச்சா..? வெளியாகிய பரபரப்பான தகவல்..

இவ்வாறு திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து மொத்தமாக விலகி தனது சொந்த வாழ்க்கையில் கவனம் செலுத்தி வருகிறார் சுவலட்சுமி. இவர் விஜய், முரளி போன்றவர்களுடன் இணைந்து நடித்த படங்களும் சூப்பர் ஹிட் பெற்றுள்ளது.