கத்தி பட வில்லனின் மனைவியா இவங்க.. அழகில் ஹாலிவுட் நடிகையை தூக்கி சாப்பிடுறாங்க..

தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு ஹீரோ தளபதி விஜய் இவர் தனது திரை பயணத்தில் பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான லியோ படம் பல தடைகளை தாண்டி வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வசூல் ரீதியாக ருத்ர தாண்டவம் ஆடியது மொத்தமாக லியோ திரைப்படம் சுமார் 600 கோடி வசூல் செய்து இருப்பதாக தகவல்கள் வெளி வருகின்றன.

அதனை தொடர்ந்து வெங்கட் பிரபுவுடன் கைகோர்த்து தளபதி 68 திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் படத்தில் பிரசாந்த், சினேகா, லைலா, பிரபுதேவா, மைக் மோகன், மீனாட்சி சவுத்ரி, யோகி பாபு, விடிவி கணேஷ், அஜ்மல் அமீர், கங்கை அமரன் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடிகைகள் நடித்து வருகின்றனர்.

இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து காணப்படுகிறது இந்த நிலையில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான கத்தி திரைப்படத்தில் வில்லனாக நடித்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நீல் நித்தின் முகேஷ். இவர் பாலிவுட்டில் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாகவும் அதன் பிறகு ஹீரோவாக நடித்துள்ளார்.

நீல் நித்தின் முகேஷ் தனது மனைவியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சில இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் உங்களைப் போலவே உங்கள் மனைவியும் செம்ம அழகாக இருக்கிறார்கள் என ஒரே கமெண்ட் அடிக்கின்றனர் மேலும் கத்தி போன்ற நல்லதொரு வில்லன் கதாபாத்திரத்தில் நீங்கள் நடிக்க வேண்டும் என கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர்.

neil nitin mugesh and wife
neil nitin mugesh and wife