டாஸ்க்கை சிறப்பாக செய்யும் தினேஷ்.. உதைத்து தள்ளிய விஷ்ணு.! நாரதர் வேலை பார்த்த பிக் பாஸ்

Bigg Boss season 7 Tamil Today promo 2: பிக் பாஸ் சீசன் 7 போட்டியாளர்களுக்கு இடையே கடுமையான வாக்குவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில் பிக் பாஸ் தொடர்ந்து சண்டையை மூட்டி விடும் வகையில் டாஸ்க்களை  வைத்திருக்கிறார். அப்படி வாரம் தோறும் புதிய டாஸ்க்கள் அறிமுகப்படுத்தி வருவதனால் போட்டியாளர்களுக்கு இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.

இந்நிலையில் இந்த வாரம் பூர்ணிமா அல்லது சரவண விக்ரம் இவர்களில் ஒருவர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த வாரம் கேப்டனாக இருந்த மாயா ஹவுஸ் மேட்ஸ்களை சரிசமமாக நடக்காத காரணத்தினால் கமல்ஹாசன் வெளுத்தெடுத்தார். இந்த சூழலில் இந்த வார கேப்டன் ஆகா தினேஷ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

காட்டுன கவர்ச்சி வீண் போகல.. குவியும் பட வாய்ப்புகள்.! பாலிவுட்டுக்கு செல்ல இருக்கும் சாக்ஷி அகர்வால்

இவருடைய கேப்டன்சி கண்டிப்பாக நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு தினங்களாக தீபாவளி பண்டிகை கொண்டாடி வந்த நிலையில் இந்த வாரம் கடுமையான டாஸ்க் நடைபெற்று வருகிறது. அதாவது ஒரு ஹவுஸ்மேட் இன்னொரு ஹவுஸ்மேட்டாக மாற போறீங்க என்று கூறப்படுகிறது. அப்படி தினேஷை பிக் பாஸ் தனியாக அழைத்து சீக்ரெட் டாஸ்க் கொடுத்துள்ளார்.

அதாவது மாயாவாக இருக்கும் விஷ்ணுவை கோபப்படுத்த வேண்டும் என கூறுகிறார். முதல் ப்ரோமோவில் விஷ்ணுவை வேண்டுமென்றே தினேஷ் கோபப்படுத்தியது தெரியவந்தது அதேபோல் இரண்டாவது ப்ரோமோவிலும் இவர்களுக்கிடையே சண்டை முத்தி உள்ளது.

90 -களில் கவர்ச்சி காட்டி ரசிகர்களின் மனதை சாறு பிழிந்த நடிகை மாதவியின் மகளைப் பார்த்துள்ளீர்களா.. இதோ பபுகைப்படம்

தினேஷ் விஷ்ணுவை ப்ரோமோ பொறுக்கி என சொல்ல இதனால் ஆவேசம் அடையும் விஷ்ணு என்ன பொறுக்கியா எனக் கூறி கோபத்துடன் தினேஷ் அமர்ந்திருந்த புஷ்ஷனை காலால் உதைத்து தள்ளி அதே நிலைமை தான் உனக்கும் என கூறுகிறார். பிறகு ப்ரோமோவில் வரவேண்டும் என்பதற்காக அந்தக் காதுல பொறுக்குறது இந்த காதில் பொறுக்குறது எனக்கூற போயா உன்ன பத்தி எனக்கு தெரியும் என்று விஷ்ணு சொல்ல உனக்கு என்ன தெரியும் என கடுமையான கோபத்துடன் கேட்க ஹவுஸ் மேட்ஸ்கள் கதறுகின்றனர்.