காட்டுன கவர்ச்சி வீண் போகல.. குவியும் பட வாய்ப்புகள்.! பாலிவுட்டுக்கு செல்ல இருக்கும் சாக்ஷி அகர்வால்

Sakshi Agarwal: தனது இன்ஸ்டாகிராமில் படும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு பட்டித்தொட்டி எங்கும் பிரபலமானவர்தான் நடிகை சாக்ஷி அகர்வால். இவர் எந்த அளவிற்கு திரைப்படங்களில் நடித்து பிசியாக இருந்து வருகிறாரோ அதேபோல் இன்ஸ்டாகிராமிலும் கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்

அப்படி இவர் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. சாக்ஷி விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நிலையில் இதன் பிறகு படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளும் குவிந்து வருகிறது. தமிழில் இவர் ஆர்யாவுடன் இணைந்து டெடி, ரஜினியின் காலா, அஜித்தின் விசுவாசம், அரண்மனை 3 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LCU உள்ளிட மூன்று டாப் நடிகர்களுடன் நடித்திருக்கும் பிக் பாஸ் சூனியக்காரி மாயா.!

மாடலின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமான இவர் தமிழில் அட்லீ இயக்கத்தில் வெளியான ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் சினிமாவில் நடிப்பதை தொடர்ந்தார். இவ்வாறு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் சொல்லும் அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் பிரபலம் கிடைக்கவில்லை. எனவே தொடர்ந்து படத்தில் கூட இல்லாத அளவிற்கு கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிடுவதை தொடர்ந்தார்.

இவ்வாறு இவர் காட்டுன கவர்ச்சி வீண் போகவில்லை என்றுதான் கூற வேண்டும் ஏனென்றால் சமீப காலங்களாக தொடர்ந்து ஹீரோயினாக நடித்து வரும் நிலையில் பாலிவுட்டிலும் அடி எடுத்து வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்பொழுது சாக்ஷி அகர்வால் அகர்வால் தமிழில் பல படங்களை கைவசம் வைத்திருந்தாலும் இவருக்கு கனன்டா, மலையாளம் மொழிகளில் பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

பொண்டாட்டி பிறந்தநாளை கூட ஞாபகம் வச்சுக்க முடியல பாண்டியன் மீது கோபத்தில் இருக்கும் கோமதி – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 இன்றைய எபிசோட்

அப்படி மலையாள நடிகர் மம்முட்டியின் தங்கை மகன் நடிக்கும் புதிய படத்தில் ஹீரோயின் ஆக கிராமத்து பெண் வேடத்தில் நடித்து வருகிறார். மேலும் கன்னட இசையமைப்பாளர் பி.அஜெனீஷ் லோக்நாத் தயாரிக்கும் புதிய படத்தில் வித்தியாசமான கேரக்டரில் நடிக்கிறார் எனவும் கூறப்படுகிறது. இவ்வாறு தென்னிந்திய சினிமாவை தொடர்ந்து விரைவில் பாலிவுட்டிலும் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்து வருகிறதாம் விரைவில் சாக்ஷி அகர்வாலை பாலிவுட் படங்களிலும் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.