LCU உள்ளிட மூன்று டாப் நடிகர்களுடன் நடித்திருக்கும் பிக் பாஸ் சூனியக்காரி மாயா.!

Bigg Boss Maya: பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் போட்டியாளராக கலந்து கொண்டவர்களில் ஒருவர் தான் மாயா. இந்நிகழ்ச்சி தொடங்கிய காலகட்டத்தில் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வந்தாலும் சமீப காலங்களாக ரசிகர்களிடம் வெறுப்பை சம்பாதித்து வருகிறார்.

தனக்கான டீமை உருவாக்கிக் கொண்டு பிடிக்காதவர்களை டார்கெட் செய்து அவர்களை மன அளவில் சோர்வடைய வைப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். இவர் கருத்து கூறும் விதம் சுத்தமாக ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை எனவே கமல்ஹாசன் இதனை கடந்த வாரம் தட்டி கேட்டவர்.

பொண்டாட்டி பிறந்தநாளை கூட ஞாபகம் வச்சுக்க முடியல பாண்டியன் மீது கோபத்தில் இருக்கும் கோமதி – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 இன்றைய எபிசோட்

அதாவது கடந்த வார கேப்டனாக இருந்த மாயா ஸ்மால் பாஸ் வீட்டில் இருந்த தினேஷ், விசித்ரா, அர்ச்சனா போன்றவர்களை டார்கெட் செய்து பழிவாங்கி வந்தார். அவர்களுக்கு தேவையான அடிப்படை விஷயங்கள் கூட தராதது அனைவரையும் கோபமடைய வைத்தது. எனவே ரசிகர்களின் கோரிக்கையின்படி கமல் சூனியக்காரி மாயாவின் ஏஜென்ட் டீமை வெளுத்தெடுத்தார்.

இவ்வாறு பிக் பாஸ் நிகழ்ச்சியில் அறிமுகமாவதற்கு முன்பு மூன்று டாப் நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார் மாயா. அந்த படங்கள் குறித்தும் நடிகர்கள் குறித்து பார்க்கலாம். முதலில் சங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான 2.0 திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்திற்கு வெற்றி குறி போட்ட சூப்பர் ஸ்டார் ரஜினி.. ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய புகைப்படம்

இப்படத்தின் துவக்கத்தில் கல்லூரி மாணவர்களுடன் இணைந்து ரஜினியை சந்திக்க வரும் காட்சியில் மாயா நடித்திருந்தார். இதனை அடுத்து கமலஹாசனின் விக்ரம் திரைப்படத்திலும் நடித்திருந்தது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் மேலும் சமீபத்தில் விஜய் நடிப்பில் LCU-வாக வெளியான லியோ படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்துள்ளார்.