ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்திற்கு வெற்றி குறி போட்ட சூப்பர் ஸ்டார் ரஜினி.. ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய புகைப்படம்

Rajini : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் திரைக்கு நல்ல படங்களை கொடுத்து வருகிறார் அந்த வகையில் விஜய் சேதுபதியை வைத்து பீட்சா, ரஜினியை வைத்து பேட்ட, சித்தார்த்தை வைத்து ஜிகர்தண்டா என வெற்றி படங்களை கொடுத்த கார்த்திக் சுப்புராஜ் சிறு இடைவெளிக்குப் பிறகு  ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தை எடுத்துள்ளார்.

இந்த படம் தீபாவளி முன்னிட்டு கடந்த பத்தாம் தேதி கோலாகலமாக வெளியானது. படத்தில் ராகவா லாரன்ஸ், எஸ் ஜே சூர்யா, இளவரசு, பாவா செல்லதுரை, சைன் டாம் சாக்கோ, அரவிந்த் ஆகாஷ் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்திருந்தனர் படம் வெளியான முதல் நாளிலிருந்து இப்பொழுது வரையிலும் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது.

எப்படியாவது கமலுடன் நடிக்க வேண்டும் என பிகினி உடை புகைப்படங்களை சங்கருக்கு அனுப்பிய நடிகை.! வாய்ப்பு கிடைத்ததா இல்லையா இதோ அவரே கூறிய தகவல்..

அதனால் படத்தின் வசூலும் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது இதுவரை மட்டுமே சுமார் 35 கோடிக்கு மேல் வசூல் அள்ளி இருக்கிறதாம்.  மக்கள் மற்றும் ரசிகர்களையும் தாண்டி திரைப்பட நடிகர்கள், இயக்குனர்களும் படத்தை புகழ்ந்து பேசி வருகின்றனர்.

இந்த மாதிரியான நேரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தை பார்த்து விட்டு எஸ் ஜே சூர்யா, ராகவா லாரன்ஸ் ஆகியவர்களை புகழ்ந்து தள்ளினார் மேலும் கார்த்திக் சுப்புராஜையும் வாழ்த்தினார் அதனைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினி ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் பட நடிகர், இயக்குனர் மற்றும் அவருடைய டீமுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

போட்டி போட்டு ஜெயிக்கிற சுகமே தனி தான்.. ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் 5 நாள் முடிவில் அள்ளிய வசூல் எவ்வளவு தெரியுமா.?

அந்த புகைப்படம் இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது இதை பார்த்த ரசிகர்கள் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்திற்கு வெற்றிக்கொடி போட்டுட்டீங்க செம சூப்பர் என கூறி கமெண்ட் எடுத்து லைக்குகளை தட்டி வீசி வருகின்றனர் இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

Rajini
Rajini