சண்டை போட்டுக்கலாம் சனிக்கிழமை பார்த்துக்கலாம்.! மாயாவின் கேப்டன்சியை கழுவி ஊற்றும் ஹவுஸ் மேட்ஸ்கள்.. பூர்ணிமாவை தலை குனிய வைத்த கமல்

Bigg Boss season 7 Tamil today promo 2: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் மிகவும் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த வாரம் மாயாவின் கேப்டன்சியை ஹவுஸ் மேட்ஸ்கள் கழுவி ஊற்றியுள்ளனர். கடந்த வாரம் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என ரெட் கார்டு கொடுக்கப்பட்டு பிக் பாஸ் வீட்டை விட்டு பிரதீப் வெளியேற்றப்பட்டார்.

எனவே இதனால் தொடங்கிய பிரச்சனை அந்த வாரம் முழுவதும் நீடித்து தற்பொழுது இறுதியில் கமல்ஹாசனால் முடிவுக்கு வர உள்ளது. பிரதீப் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதற்கு காரணம் கமல்ஹாசன் தான் எனவும் தீர விசாரித்து முடிவு செய்ய வேண்டும் என ரசிகர்கள் கன்னடம் தெரிவித்ததால் நேற்று அதற்கான விளக்கத்தை கொடுத்தார்.

ரஜினி நிராகரித்த கதை.. 100 கோடி பட்ஜெட்டில் இணைந்த சிம்பு.!

இதனை அடுத்து இன்று தான் மாயாவின் ஏஜென்ட் டீம் செய்த தவறுகளை தட்டிக் கேட்க இருக்கிறார் அப்படி மாயாவின் கடந்த வார கேப்டன்சியை பற்றி ஹவுஸ் மேட்ஸ்களிடம் கேட்க அனைவரும் கழுவி ஊற்றியுள்ளனர். அதாவது தற்பொழுது வெளியாகி இருக்கும் இரண்டாவது ப்ரோமோவில் மாயா உடைய கேப்டன்சி எப்படி இருந்தது என ஹவுஸ் மேட்ஸ்களிடம் கமல் கேட்க இதற்கு முதலில் கானா பாலா சண்டை போட்டுக்கலாம் சனிக்கிழமை பார்த்துக்கலாம் என்பது போல் இருந்ததாக கிண்டல் செய்கிறார்.

பிறகு பூர்ணிமா சின்ன சின்ன தவறுகள் நடந்தது உண்மைதான் சார் என சொல்ல சின்ன சின்ன தவறுகள் தான் நடந்ததா என கமல் கேட்டவுடன் ரசிகர்கள் கைதட்டுகின்றனர். இதனால் பூர்ணிமா தலை குனிந்து நிற்கிறார் மேலும் கூல் சுரேஷ் தன்னிச்சையாக செயல்படவில்லை என்று சொல்கிறார்.

கோமதி பிறந்தநாளுக்கு கிப்ட் வாங்கி கொடுத்த பாண்டியன்.. அசந்து போன மகன்கள் – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 ப்ரோமோ

இவரை அடுத்து தினேஷ் தோழிகள் எல்லாம் கூட நின்னு சூப்பர் மாயா என சொன்னது வான்ட்டடா இருந்துச்சு என்று கூறுகிறார். மேலும் விசித்ரா உயிர் தோழிகள் கூடவே இருந்து கெடுக்குறாங்கன்னா அவங்க எந்த விதத்தில் ஃப்ரெண்ட்ன்னு தெரியல சார் என பூர்ணிமாவை டார்கெட் செய்கிறார்.  அர்ச்சனா நாட் கூல் எனக் கூற இதோட ப்ரமோ நிறைவடைகிறது.