உங்களுக்கு என்ன மாலைக்கண்ணா? சூனியக்காரி மாயாவின் ஏஜென்ட் டீமை வெளுத்து வாங்கும் கமல்ஹாசன்… அரங்கையே அதிர வைக்கும் ரசிகர்களின் ஓசை

Bigg Boss season 7 Tamil today promo 2: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் சுவாரஸ்யத்திற்கு பஞ்சம் இல்லாமல் இருந்து வருகிறது. அதாவது சூனியக்காரி மாயாவின் ஏஜென்ட் டீம் பிளான் பண்ணி பிரதீப் வீட்டில் இருந்தால் எங்களுக்கு பாதுகாப்பு இல்லை என கூறி கமல்ஹாசன் மூலம் ரெட் கார்டு கொடுத்து அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த 7வது சீசனின் டைட்டில் வின்னர் ஆகக்கூடிய அனைத்து திறமைகளும் பிரதீப்பிற்கு தான் இருக்கிறது என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் திடீரென ஏஜென்ட் டீம் இந்த வேலையை பார்த்ததால் ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். மேலும் கமல்ஹாசனுக்கு ஒரு விஷயத்தை செய்வதற்கு முன்பு ஆராய வேண்டும் என அறிவுரை கூறியுள்ளனர்.

குற்றம் சாட்டியவர்கள் யோக்கியமா? உச்சகட்ட கோபத்தில் ஆண்டவர்.. பரபரப்பான பிக்பாஸ் ப்ரோமோ

மறுபுறம் இந்த வார கேப்டன் ஆனா மாயா அர்ச்சனா, தினேஷ், விசித்ரா மூவரையும் டார்கெட் செய்து செய்த விஷயங்கள் அனைத்தும் ரசிகர்களை கடும் கோபத்திற்கு ஆளாக்கியுள்ளது. எனவே மாயா, பூர்ணிமா பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என கூறி வருகின்றனர். இந்நிலையில் முதல் ப்ரோமோவில் தப்பு செய்ததற்கான தண்டனை கிடைத்தே ஆக வேண்டும் என கூறியதை பார்த்தோம்.

இதனை அடுத்து தற்பொழுது இரண்டாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் சூனியக்காரி மாயாவின் ஏஜென்ட் டீமிடம் கமல்ஹாசன் நீங்க சொன்ன குற்றச்சாட்டுகள் எல்லாம் உண்மைதான உண்மை என்றால் இது ஏன் நடந்தது அந்த படத்தை போடுங்க சார். அதிகாரம் உங்கள் கையில் இருக்கும் பொழுது நீங்க என்ன பண்ணுனீங்கனு மறந்துட்டீங்கன்னு  நினைக்கிறேன்.

குற்றம் சாட்டியவர்கள் யோக்கியமா? உச்சகட்ட கோபத்தில் ஆண்டவர்.. பரபரப்பான பிக்பாஸ் ப்ரோமோ

சிவப்பு மஞ்சளா  தெரிஞ்சிருக்கணும் என்ன மால கண்ணா? கொடுக்க மாட்டேனு சொல்லி இருக்கலாமே அது உங்க முடிவு தானே நீங்க என்னையும் உங்க கூட பிளேயரா சேத்துக்கிட்ட மாதிரி இருக்கு என கமல்ஹாசன் தொடர்ந்து தனது பாயிண்டுகளை கூற மாயாவின் ஏஜென்ட் டீம்  முழித்துக் கொண்டிருக்கின்றனர். இவ்வாறு கமல் பேச ரசிகர்களின் சத்தம் அரங்கையே அதிர வைக்க ஒன்னும் புரியாமல் திக்கி திணறி நிற்கின்றனர். இதனால் அர்ச்சனா, விசித்ரா போன்றவர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள்.