கேப்டன்சி டாஸ்க்கில் இந்த முறையும் தோற்ற ஜோவிகா? அடுத்த வாரம் கேப்டன் இவர்தான்..

Bigg Boss 7 Tamil today promo 1: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் நிலையில் தொடர்ந்து நாள் தோறும் புதிய டாஸ்க்களுடன் ஓடிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் கடந்த இரண்டு வாரங்களாக தினேஷ் கேப்டனாக இருந்து வருகிறார் எனவே அடுத்த வாரம் இவர் கண்டிப்பாக கேப்டனாக கூடாது என ஹவுஸ் மேட்ஸ்கள் டார்கெட் செய்து உள்ளார்கள்.

அதாவது நேற்று நடைபெற்ற டாஸ்க்கில் வேண்டுமென்றே தோற்று அடுத்த வார நாமினேஷனுக்கு நேரடியாக தினேஷ் அனைவராலும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவரை எடுத்து இந்த வாரம் கேப்டன்சி டாஸ்க்கில் யார் ஜெயித்துள்ளார் என்பது குறித்த ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அப்பத்தாவின் விஷயத்தில் மாட்டிக்கிட்டு முழிக்கும் குணசேகரன்.. அதிரடி காட்டும் ஜனனி.! அசிங்கப்படுத்திய ஈஸ்வரி

ஜோவிகா பலமுறை கேப்டன்சி டாஸ்க்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும் இதுவரையிலும் ஒரு கேப்டன்சி டாஸ்க்கில் கூட ஜெயிக்கவில்லை. அப்படி இந்த வாரமும் கேப்டன்சி டாஸ்குக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அந்த வகையில் இந்த வாரம் நிக்சன், விஷ்ணு, ஜோவிகா மூன்று பேரும் கேப்டன்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில் தற்பொழுது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் கேப்டன்சி டாஸ்க்கில் பெட்டியில் கேப்டன் என்ற வார்த்தைகள் வைக்கப்பட்டுள்ளது அதனை எடுத்து வந்து பலகையில் சரியாக பதிக்க வேண்டும். அப்படி விஷ்ணு, நிக்சன், ஜோவிகா மூன்று பேரும் கடுமையாக விளையாடிக் கொண்டிருக்க ஒரு கட்டத்தில் ஜோவிகா வெளியேறுகிறார்.

5 சூப்பர் ஹிட் படங்களை நழுவ விட்ட அஜித், விக்ரம்.. வந்ததை இறுக்கமாக பிடித்து வளர்ந்த வாரிசு நடிகர்

அதன் பிறகு விஷ்ணு, நிக்சன் இருவரும் விளையாடி வருகின்றனர் இவர்களில் ஒருவர் கேப்டன் ஆகியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. மேலும் ஜோவிகா எத்தனையோ பேர் கேப்டன்சி டாஸ்க்காக காத்துகிட்டு இருக்காங்க ஆனால் நான் ஒவ்வொரு முறையும் தோற்று விடுவதாக கூறி அழுது கொண்டு இருக்கிறார். இதற்கு முன்பே பலமுறை கேப்டன்சிக்கு ஜோவிகா தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தாலும் தற்பொழுது வரையிலும் கேப்டன் ஆகவில்லை.