5 சூப்பர் ஹிட் படங்களை நழுவ விட்ட அஜித், விக்ரம்.. வந்ததை இறுக்கமாக பிடித்து வளர்ந்த வாரிசு நடிகர்

Ajith : தமிழ் சினிமாவில் இன்று உச்ச நட்சத்திரமாக இருக்கும் அஜித், விக்ரம் தனித்தனி டிராக்கில் ஓடிக்கொண்டிருக்கின்றனர் விக்ரம் எப்படிப்பட்ட கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் தன்னுடைய திறமையை காட்டி அந்த படத்தை வெற்றி பெற செய்கிறார். விக்ரம் கைவசம் தற்பொழுது தங்கலான் திரைப்படம், துருவ நட்சத்திரம் ஆகியவை இருக்கின்றன.

அஜித் தொடர்ந்து ஆக்சன் படங்களில் சமூக அக்கரை உள்ள கருத்துக்களை திணித்து நடித்து வருகிறார் அந்த படங்களும் பெரிய வெற்றியை பதிவு செய்கின்றன அப்படி அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான துணிவு மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து அடுத்து விடாமுயற்சி படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.

மாமனிதன் படத்தில் அஜித் நடித்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.. சொன்னது யார் தெரியுமா.?

இந்த நிலையில் அஜித், விக்ரம் தவறவிட்ட 5 படங்களை பற்றி பார்ப்போம்..  நேருக்கு நேர் திரைப்படத்தில் முதலில் அஜித்தும், விஜயும் தான் நடிக்க இருந்தார்கள் அஜித் சில காரணங்களால் மறுக்க அந்த படத்தில் சூர்யா நடித்து தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். நந்தா படத்தில் முதன்’ முதலில் நடிக்கவிருந்தது அஜித் தான் ஆனால் அந்த கேரக்டர் எனக்கு செட்டாகாது என அஜித் தவற விடவே..

சூர்யா அதில் நடித்தார் அந்த படம் அவருக்கு மிகப்பெரிய ஒரு வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. மௌனம் பேசியதே திரைப்படத்தில் முதலில் நடிக்க வேண்டியது விக்ரம் தான் ஆனால் கடைசி நேரத்தில் சூர்யா அந்த படத்தில் நடித்து பெண்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார். அதுபோல காக்க காக்க படத்தில் விக்ரம் அல்லது அஜித்தை நடிக்க வைக்க தான் படக்குழு முதலில் திட்டமிட்டது.

விஜய் டிவியே வேண்டாம் என ஓட்டம் பிடித்த 5 பிரபலங்கள்.! கல்லாலும் செருப்பாலும் அடி வாங்கிய பிரபலம்..

ஆனால் ஷூட்டிங் ஆரம்பிக்கும் கடைசி நேரத்தில் சூர்யா அந்த படத்தில் கமிட்டாகினார் அந்த படம் பெரிய வெற்றியை பதிவு செய்தது அதுபோல கஜினி படத்தில் முதலில் அஜித் தான் நடிக்க ஏ ஆர் முருகதாஸ்  திட்டமிட்டிருந்தார் ஆனால் அஜித் மறுக்க பின் சூரியா வசம் சென்றடைந்தது. இப்படி அஜித், விக்ரம் கைவிட்ட படங்களில் சூர்யா நடித்து மார்க்கெட்டை பிடித்துக் கொண்டார்.