கேப்டனா ஒன்னும் கிழிக்கல.. டாஸ்க்கிலும் தினேஷை டார்கெட் செய்யும் பூர்ணிமா.! BB 7 டைட்டில் வின்னர் விக்ரமா?

Bigg Boss season 7 Tamil today promo 1: பிக் பாஸ் நிகழ்ச்சியில் மாயா பூர்ணிமாவை கடந்த வாரம் கமல்ஹாசன் எச்சரித்த நிலையில் இதனை அடுத்த தொடர்ந்து மாயா தினேஷை பாக்கெட் செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். கேப்டனாக மாயா இருந்த வாரத்தில் விசித்ரா, அர்ச்சனாவை டார்ச்சர் செய்தனர். எனவே இதனால் கடுப்பான ரசிகர்கள் சூனியக்காரி மாயாவின் ஏஜென்ட் டீமீல் இருந்து ஒவ்வொருவராக வெளியேற்ற வேண்டும் என கூறி வருகிறார்கள்.

இவ்வாறு போய்க் கொண்டிருக்கும் நிலையில் அர்ச்சனாவை பலமுறை சண்டைக்கு இழுத்த பூர்ணிமா இந்த வாரம் ஃப்ரண்டாக இருக்க வேண்டும் என நினைப்பதாக கூறியிருந்தார். இவர் நன்றாகவே நடிக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிகிறது. இவரைத் தொடர்ந்து தினேஷையும் அடிக்கடி டார்கெட் செய்வதை மாயா, பூர்ணிமா இருவரும் வழக்கமாக வைத்திருக்கின்றனர்.

அஜித்தையே கெஞ்ச விட்ட தயாரிப்பாளர்.. கடைசியில் நடந்த தரமான சம்பவம்.!

அப்படி நேற்றிலிருந்து பெண் போட்டியாளர்கள் ஆண் போட்டியாளர்களாகவும் ஆண் போட்டியாளர்கள் பெண் போட்டியாளர்களாகவும் கேரக்டர் மாறி நடித்து வருகின்றனர். தினேஷ் நடித்தா நல்லா இருக்காது எனக்கூறி பூர்ணிமா வேண்டாம் என தெரிவித்தார் இதனால் பிக் பாஸ் தினேஷை இந்த டாஸ்க் விளையாட வைத்துள்ளார்.

அதன்படி தினேஷ் பூர்ணிமாவாக இருக்க பூர்ணிமா தினேஷாக இருக்கிறார் தற்பொழுது வெளியாகி இருக்கும் இன்றைய முதல் ப்ரோமோவில் ஆண்களோட பங்களிப்பு அதிகமா இருக்கா பெண்களோட பங்களி அதிகமா இருக்கா என கேள்வி கேட்கப்படுகிறது. அதில் விசித்ராவான நிக்சன் ஒண்ணுமே பண்ணல என்ன சொல்ல மணியான ரவீனா மேடம் நீங்க வாயாலேயே வடை சுடுறீங்க என சொல்ல மணி நீ இரு என நிக்சன் கூறுகிறார்.

கல்லுக்கு புடவை கட்டுனா கூட தலைவன் விட மாட்டாரு.! 100-க்கும் மேற்பட்ட பெண்களை… பிரபல நடிகர் பற்றி புட்டு புட்டு வைத்த சுசித்ரா…

நீங்க என்ன கிழிச்சு இருக்கீங்க கிச்சன்ல இருந்து என்று கேட்க பிராவோ இவர்களுடைய சண்டை பேஸ்லெஸ்ஸாக இருக்கும் என கூறுகிறார் நீங்க பேஸ்லெஸ்னு சொல்ல கூடாது வாயை கழுவி விடுடா என மாயா கேட்கிறார். இவங்க எல்லாம் கன்டென்ட் பண்ணிட்டு விஷ்ணுவா இருக்கட்டும் என தினேஷ் சொல்லிக் கொண்டிருக்க தினேஷாக இருக்கும் பூர்ணிமா கேப்டன்சியில நான் என்ன பண்ணுவேன்னு நினைச்சீங்க நான் எதுவுமே பண்ணல சோ பிபி 7 டைட்டில் வின்னர் என சொல்ல விக்ரமை ஜூம் செய்து பிக்பாஸ் காட்டுகிறார்.