ஏஜென்ட் டீமுக்கு எதிராக குரல் கொடுப்பதனால் அர்ச்சனாவுக்கு அதிகரிக்கும் ஆதரவு.! முன்னாள் பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆரி அர்ஜுனனின் வைரல் பதிவு..

Bigg Boss 7: பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் தற்பொழுது பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் சண்டை சச்சரவுகளுடன் பிக் பாஸ் வீடு கலவர கோலத்திலிருந்து வருகிறது. அதாவது பிரதீப் ஆண்டனி பிக் பாஸ் வீட்டில் இருந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு கிடையாது என பூர்ணிமா, மாயா கேங் பிளான் போட்டு புகார் செய்து வெளியேற்றி விட்டனர்.

எனவே இதனால் கடுப்பான ரசிகர்கள் கமல்ஹாசன் மற்றும் பிக் பாஸ் நடத்துபவர்களை ட்ரோல் செய்து பங்கம் செய்து வருகிறார்கள். மறுபுறம் இந்த வார கேப்டனான மாயா ஸ்மால் பாஸ் வீட்டில் இருக்கும் அர்ச்சனா, தினேஷ், விசித்ரா மூன்று பேரையும் டார்கெட் செய்து வருகிறார்.

சூப்பரா நடிக்கிறான், வளரட்டும்.. ரஜினிக்கு வழி விட்டு சிவாஜி.! எந்த படத்தில் தெரியுமா.?

இன்று நடைபெற்ற கிளினிக் டாஸ்க்கில் அவர்களை ஜெயிக்க விடக்கூடாது எப்படியெல்லாம் வேலை வாங்க போறான் பாருங்க என கூறி வந்தார். ஆனால் எதிர்பாராத விதமாக ஸ்மால் பாஸ் விட்டார்கள் வெற்றி பெற்று மாயாவிற்கு பல்பு கொடுத்துள்ளனர். இவ்வாறு மாயா ஏஜென்ட் டீமுக்கு எதிராக அர்ச்சனா களம் இறங்கி இருக்கும் நிலையில் நாளுக்கு நாள் இவருக்கு ஆதரவு மக்கள் மத்தியில் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

அர்ச்சனா மிகவும் எமோஷனலாக அழுதாலும் தன்னுடைய பாயிண்டுகள் அனைத்தையும் முன் வைக்கிறார் எனவே இதற்கு மேல் அழுகாமல் தைரியமாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அர்ச்சனாவுக்கு பிக் பாஸ் முன்னாள் டைட்டில் வின்னர் ஆரி அர்ஜுனன் ஆதரவு கொடுத்துள்ளார்.

ஏஜென்ட் டீம்லா கிளம்புங்க.. இனிமே நாங்கதான்.! டாஸ்க்கில் ஜெயித்து பிக் பாஸ் வீட்டாரை அலறவிட்ட சுமால் பாஸ் ஹவுஸ்மேட்ஸ்

அதாவது, தனது எக்ஸ் தளத்தில் ‘Archana you begin the game stay strong’ என பதிவிட்டுள்ளார். தொடர்ந்து அர்ச்சனா தனது எமோஷனலை கண்ட்ரோல் செய்து கொண்டு இவ்வாறு விளையாடி வந்தால் கண்டிப்பாக டைட்டில் வின்னர் ஆகும் அனைத்து வாய்ப்புகளும் இவருக்கு உள்ளது.