காத்துவாக்குல ஐஷுவின் காலை தடவும் நிக்சன்.! இது எல்லாம் உங்க கண்ணுக்கு தெரியாதா?

Bigg Boss season 7 Tamil today: பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் கடந்த ஒரு மாதங்களாக மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் பல திருப்பங்களுடன் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த 7வது சீசனின் டைட்டிலுக்கு தகுதி இருந்த பிரதீப்பிற்கு ரெட் கார்டு கொடுத்து பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றி உள்ளனர்.

அதாவது பிக் பாஸ் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை எனக் கூறி மாயா, பூர்ணிமா என தங்களுக்கு ஜால்ரா அடிக்கும் பெண்களை சேர்த்துக் கொண்டு ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பி வைத்து விட்டதாக ரசிகர்கள் அனைவரும் குற்றம்சாட்டி வருகின்றனர்கள். பிரதீப் கொஞ்சம் ஆபாசமாக பேசினாலும் அவருடைய நடத்தையில் எந்த ஒரு தவறும் இல்லை என விசித்ரா, அர்ச்சனா தங்களது வாதத்தை முன்வைத்து வருகிறார்கள்.

bigg boss 7 tamil
bigg boss 7 tamil

இவ்வாறு இது ஒருபுறம் போய்க்கொண்டிருக்க இந்த வார கேப்டனான மாயா ஸ்மால் பாஸ் வீட்டில் இருக்கும் அனைத்து போட்டியாளர்களையும் தன்னால் முடிந்தவரை பழிவாங்கி வருகிறார். வேண்டுமென்றே அவர்களிடம் சண்டை போடுவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்.

கலவையான விமர்சனங்களுக்கு மத்தியில் “லியோ” திரைப்படம் இதுவரை அள்ளிய வசூல் எவ்வளவு தெரியுமா.?

எனவே இந்த வாரம் கடுமையான சண்டைகளுக்கு இடையே ஓடிக் கொண்டிருக்கிறது. இவ்வாறு உண்மையாகவே பெண்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் நபர்கள் சிலர் உள்ளே இருக்கின்றனர் என சில வீடியோவை ரசிகர்கள் சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகின்றனர்.

 

bigg boss 7 today
bigg boss 7 today

குறிப்பாக ஐஷூவிடம் நிக்சன் எல்லை மீறி நடந்து கொள்ளும் காட்சிகள் இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது. இருவரும் மைக்கை கழட்டி விட்டு பேசுவது, கண்ணாடியில் முத்தம் கொடுப்பது, ஒரே தட்டில் சாப்பிடுவது என சில்மிஷம் வேலைகளை பார்த்து வருகிறார்கள். மேலும் அனைவரும் முன்னிலையிலும் ஐஷுவை நிக்சன் தூக்கிக்கொண்டு செல்வது, ஐ ஷு படுத்திருக்கும் பொழுது புருவத்தை தடவி உன்னுடைய கண்ணு அழகா இருக்கு என்று சொன்னது எல்லாமே வீடியோவில் பதிவாகி இருக்கிறது.

சூனியக்காரி கேப்டனில் தொடரும் பிரச்சனைகள்.. விதி மீறிய அர்ச்சனா, விசித்ரா.! பரபரப்பான பிக் பாஸ் ப்ரோமோ

இந்நிலையில் நேற்று வேஷ்டி அணிந்திருந்த நிலையில் என்ன இப்படி கட்டி இருக்கிற என்று அவரது வேஷ்டி சரி செய்யும் சாக்கில் வேட்டியை நகர்த்தி காலை தடவுகிறார். இதனால் ஐஷு பதறினாலும் எதார்த்தமாக வேஷ்டியை சரி செய்வது போல் நிக்சன் மறைத்து விடுகிறார். இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாக இவனை முதலில் வெளியில அனுப்புங்க டா என கூறி வருகின்றனர்.