சூனியக்காரி கேப்டனில் தொடரும் பிரச்சனைகள்.. விதி மீறிய அர்ச்சனா, விசித்ரா.! பரபரப்பான பிக் பாஸ் ப்ரோமோ

Bigg Boss season 7 today promo 1: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் நிலையில் நாளுக்கு நாள் சண்டை சச்சரவுகள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அப்படி தற்பொழுது பரபரப்பான காட்சிகளுடன் வெளியாகி இருக்கும் ப்ரோமோ ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை தூண்டி உள்ளது.

கடந்த இரண்டு வாரங்களாக பூர்ணிமா கேப்டனாக இருந்த நிலையில் கேப்டனின் அதிகாரம் துஷ்பிரயோகம் ஆகிவிட்டதாக கமலஹாசன் விலாசினார். மேலும் நாமினேஷன் டாஸ்க் நடைபெறும் பொழுது எந்த ஒரு டிஸ்கஷனும் இருக்க கூடாது சுவாரசியமாக இருக்க வேண்டும் என இதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

போட்டு தள்ள ஆள் வைத்த ஜீவானந்தம்.! பழைய காதலை வைத்து ஈஸ்வரியை வார்த்தையால் குத்தி கிழிக்கும் குணசேகரன்…

மேலும் விதி மீறல் மீண்டும் மீண்டும் செய்து வந்தால் தக்க தண்டனை வழங்கப்படும் எனவும் கூறியிருக்கும் நிலையில் இந்த வாரம் நாமினேஷன் எப்பொழுதும் போல் சுவாரஸ்யமாக நடைபெற்றது. இதில் அர்ச்சனா, தினேஷ், பூர்ணிமா, ஐஷூ, பிராவோ, விசித்ரா ஆகியோர்கள் சிக்கிவுள்ளனர்.

இந்த வாரம் கேப்டனான மாயா தொடர்ந்து ஸ்மால் பாஸ் வீட்டில் இருக்கும் அர்ச்சனா, தினேஷ், விசித்ரா ஆகியோர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் தற்பொழுது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் டூத் பிரஸ் கொடுங்க என மாயாவிடம் விசித்ரா கேட்க அதற்கு மாயம் முதலில் டீ போடுங்க என கூறுகிறார்.

42வயதில் தேவசேனாவின் மொத்த சொத்து மதிப்பு இவ்வளவா? பாகுபலியால் உயர்ந்த மார்க்கெட்..

அனைவருடைய டூத் பிரஸையும் மாயா எடுத்து வைத்துக்கொண்டு தராமல் வேண்டுமென்றே சண்டை போடுகிறார். நீங்க ரெண்டு வீட்டுக்கும் தான கேப்டன் என தினேஷ் கேட்க கை இருக்குல கையால வெலக்க சொல்லுங்க என கூறுகிறார்.

எனவே இதனால் கடுப்பான அர்ச்சனா விசித்ரா இருவரும் எல்லை மீறி பிக் பாஸ் வீட்டிற்கு வெளியில் அமர்ந்து கொண்டிருக்கிறார்கள். பூர்ணிமா அனைவரும் கடுமையாக சண்டை போட மாயா மிகவும் ஆர்டர் போடும் வகையில் திமிராக ரெண்டு பேரும் இங்க வாங்க என கூப்பிட அர்ச்சனா முடியாது என கூறுகிறார்.