ஏஜென்ட் டீமுக்கு கிடைக்கப் போகும் சரியான பதிலடி.. இந்த அசிங்கம் தேவையா.. எதிர்பாராத ட்விஸ்டுடன் இந்த வார ஓட்டிங் லிஸ்ட்

Bigg Boss Voting List: வாரம் தோறும் கமல்ஹாசன் வரும் எபிசோடுகள் அதிக அளவில் எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில் இந்த வாரம் வீட்டில் இருப்பவர்களும் கமல் எப்பொழுது வருவார் என்று எதிர்பார்ப்புடன் இருந்து வருகின்றனர். கமல் தொடர்ந்து அடுத்தடுத்து பிக் பாஸ் ஹவுஸ் மேட்ஸ்களிடம் கேள்வி கேட்டு ஒரு வழி செய்ய வேண்டும் என மக்கள் ஆதங்கத்துடன் இருந்து வருகிறார்.

என்ன தப்பு செய்தாலும் வாரத்தின் இறுதியில் கமலிடம் சாரி கேட்டால் போதும் என பூர்ணிமா, மாயா பேசிக் கொள்கின்றனர். இதுதான் நம்முடைய வழக்கம் எனவும் மிகவும் நக்கலாக பேசிக் கொண்டிருக்கும் நிலையில் இதனையும் கண்டிப்பாக தட்டிக் கேட்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

நீ எடுத்த போட்டோ கலெக்ஷன்ல இதுதான் பெஸ்ட்.. சாக்ஷி அகர்வாலின் புகைப்படத்துக்கு குவியும் கமெண்ட்

இந்த வாரம் ஏஜென்ட் டீமுக்கு சரியான போட்டியாக அர்ச்சனா மற்றும் விசித்ரா இருந்த வருகிறார்கள். ஏஜென்ட் டீமை தனித்தனியாக ஒவ்வொருவரையும் தாக்கி ஒரு வழி செய்து மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளனர். மேலும் மாயா ஏஜென்ட் டீம் செய்த அனைத்தும் மக்களை கோபப்படுத்தி இருக்கும் நிலையில் இந்த வாரம் இந்த டீமிலிருந்து இரண்டு பேர் வெளியேற வேண்டும் என கூறுகிறார்கள்.

அப்படி ஐஷூ, பூர்ணிமா தான் மிகவும் குறைவான வாக்குகளை பெற்றுள்ளனர் இருவருமே பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினால் மிகவும் மகிழ்ச்சி எனவும் தெரிவித்து வருகிறார்கள். இந்த வாரம் நாமினேஷனில் தினேஷ், அர்ச்சனா, விசித்ரா மற்றும் பூர்ணிமா, ஐஷூ, ப்ராவோ ஆகியோர்கள் சிக்கி உள்ளனர்.

ஜிகர்தண்டா 2 எந்த மாதிரியான டிவிஸ்ட்.. படம் பார்க்கலாமா.? வேண்டாமா.? இதோ விமர்சனம்.!

இந்த வார ஓட்டிங் லிஸ்டில் அர்ச்சனா அதிக வாக்குகளை பெற்று முதல் இடத்தையும் விசித்ரா, தினேஷ், ப்ராவோ என அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளார்கள். இவ்வாறு குறைவான வாக்குகளை பெற்று கடைசி இடத்தில் பூர்ணிமாவும் இவரை விட குறைவான வாக்கு வித்தியாசத்தில் ஐந்தாவது இடத்தில் ஐஷூ உள்ளார்.

பூர்ணிமா இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறி விட்டால் கண்டிப்பாக ஏஜென்ட் டீமுக்கு சரியான பதிலடியாக அமையும் எனவே இவர்தான் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர்.