ஜிகர்தண்டா 2 எந்த மாதிரியான டிவிஸ்ட்.. படம் பார்க்கலாமா.? வேண்டாமா.? இதோ விமர்சனம்.!

jigarthanda twitter review : ராகவா லாரன்ஸ் எஸ் ஜே சூர்யா ஆகியோர் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் இந்த திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகி உள்ளது இந்த திரைப்படத்துடன் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ஜப்பான் திரைப்படமும் வெளியாகி உள்ளது. ஜிகர்தண்டா முதல் பாகத்தில் இயக்குனராக சித்தார்த்தும் அசால்ட் சேதுவாக பாபி சிம்காவும் நடித்திருந்தார்கள்.

அதேபோல் அந்த திரைப்படத்தின் கடைசி காட்சியில் அழுகினி குமராக ஒரு பயங்கர கேங் ஸ்டாரை கார்த்திக் சுப்புராஜ் காட்டி ஒட்டுமொத்த ரசிகர்களையும் தனது பக்கம் கட்டி இழுத்தார் அது மட்டும் இல்லாமல் திரையரங்கில் கைதட்டல் அதிகமாகி தான் ஒரு இயக்குனர் என்ற அந்தஸ்தை அடைந்தார்.

அப்படி இருக்கும் நிலையில் ஜிகர்தண்டா இரண்டாவது பாகத்தை மீண்டும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய உள்ளார் இந்த திரைப்படத்தில் எஸ் ஜே சூர்யா இயக்குனராகவும் ராகவா லாரன்ஸ் கேங்ஸ்டர் ஆகவும் நடித்துள்ளார் இந்தத் திரைப்படம் என்ன மாதிரியான திரைப்படம் என்ன டிவிஸ்ட் இருக்கிறது எனவும் படத்தை பார்க்கலாமா வேண்டாமா என ரசிகர்கள் ட்விட்டரில் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகிறார்கள்.

ஜிகர்தண்டா திரைப்படத்தில் எப்படி டிவிஸ்ட் இருந்ததோ அதேபோல் இந்த திரைப்படத்திலும் இடைவேளையிலேயே மிகப்பெரிய டிவிஸ்ட் இருப்பதாக கூறியுள்ளார்கள். அதேபோல் இதுதான் ரியல் சினிமா என மிகவும் கொண்டாடி வருகிறார்கள் இந்த தீபாவளி வின்னர் ஆக கார்த்தியின் ஜப்பான் ராகவா லாரன்ஸ் இன் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படமா என்ற பஞ்சாயத்தும் சைடில் ஓடிக்கொண்டிருக்கிறது.

கார்த்திக் சுப்புராஜ் பக்காவாக இரண்டு நடிகர்களையும் வைத்து பில்டப் பண்ணி படத்தைக் கொண்டு வந்து நிறுத்தி உள்ளார் படம் திரையரங்கை தெரிகிறது என அபிஷேக் ராஜா விமர்சித்துள்ளார்.

அதேபோல் ஸ்ரீதர் பிள்ளை ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படத்தை பார்த்துவிட்டு இடைவேளை காட்சிகள் தீயாக இருக்கிறது எனவும் படத்தை ஹிட் படமாக மாற்ற தன்னுடைய விமர்சனத்தை கொடுத்துள்ளார்.