இந்த வார நாமினேஷனில் சிக்கிய 6 பேர்.! சூனியக்காரியினால் அழுகாசிக்கு உயர்ந்த மார்க்கெட்..

Bigg Boss season 7 Nomination: பிக் பாஸ் சீசன் 7ல் யாரை நாமினேட் செய்வது என்று சிலரை டார்கெட் செய்து அனைவரும் கலந்துரையாடி அதன் பிறகு நாமினேட் செய்து வந்தனர். எனவே இதனால் இந்த சீசனின் சுவாரசியம் போய்விட்டது என்றும் முந்தைய சீசனில் நடந்தது போல நாமினேஷன் டாஸ்க் நடைபெற வேண்டும் என ஆண்டவர் பிக் பாஸ் ஹவுஸ் மேட்ஸ்களுக்கு ஆப்பு வைத்தார்.

பிளான் பண்ணி சூனியக் கிழவி மாயா, இரண்டு வாரம் கேப்டனாக இருந்த பூர்ணிமா இருவருடைய பேச்சைக் கேட்டு மொத்த பிக் பாஸ் ஹவுஸ் மேட்ஸ்களும் ஆடி வருகின்றனர். இரண்டு வாரமாக தொடர்ந்து பூர்ணிமா கேப்டனாக இருந்ததால் கேப்டன் பதவி அதிகாரம் துஷ்பிரயோகம் ஆகிவிட்டதாக கமல் விலாசினார்.

ரோகினியை தேடி வந்த வசீகரன்.. காசுக்காக ரவி, ஸ்ருதியை வீட்டுக்கு அழைக்கும் விஜயா – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்

இவ்வாறு இந்த சீசனில் மாயா பூர்ணிமா இவர்களுடைய ஆட்டம் ரசிகர்களை கடுப்பில் அழுத்தி உள்ளது. இந்நிலையில் இந்த வாரம் நடைபெற்ற நாமினேஷன் டாஸ்க்கில் ஐஷூ, விசித்ரா, அர்ச்சனா, வி.ஜே பிராவோ, பூர்ணிமா, தினேஷ் ஆகியோர்கள் சிக்கி உள்ளனர்.

இவர்களில் அதிக வாக்குகளை பெற்று அழுகாச்சி அர்ச்சனா முதலிடத்திலும் இரண்டாவது இடத்தில் விசித்ராவும் உள்ளனர். அதாவது வந்ததிலிருந்து அழுது கொண்டே இருக்கும் அர்ச்சனா நேற்று மாயாவிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தார். மேலும் பிரதீப்பை அனைவரும் சேர்ந்து பிளான் போட்டு அனுப்பியதற்கு விசித்ரா, அர்ச்சனா இருவரும் குரல் எழுப்பினர் எனவே இதனால் இவர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல ஓட்டு கிடைத்துள்ளது.

கேமியோ ரோலில் நடித்துள்ள விஜய், அஜித், ரஜினி.! கிளைமாக்ஸ் காட்சியில் சம்பவம் பண்ணிய தனுஷ், சூர்யா

அடுத்த இடத்தில் தினேஷ், ப்ராவோ இருக்க கடைசியாக பூர்ணிமா, ஐஷூ இவர்கள்தான் குறைவாக வாக்குகளை பெற்றுள்ளனர். சூனியக்காரி மாயாவுடன் சேர்ந்து கொண்டு பூர்ணிமா பல திட்டங்களை போட்டு வருகிறார். இவரை அடுத்து நிக்சனுடன் காதலா நட்பா என தெரியாமல் லூசுத்தனமாக சுத்தி வரும் ஐஷூவும் குறைவான வாக்குகளை பெற்றுள்ளார் இவர்களில் ஒருவர் இந்த வாரம் எலிமினேட் ஆக அதிக வாய்ப்புள்ளது.