கேமியோ ரோலில் நடித்துள்ள விஜய், அஜித், ரஜினி.! கிளைமாக்ஸ் காட்சியில் சம்பவம் பண்ணிய தனுஷ், சூர்யா

Rajini : தமிழ் சினிமாவில் டாப் ஹீரோவாக இருக்கும் ரஜினி, அஜித், விஜய், சூர்யா, தனுஷ் போன்ற நடிகர்கள் தொடர்ந்து ஹீரோவாக நடித்த வந்தாலும் ஒரு சில காரணங்களால் மற்ற நடிகர்களின் படங்களில் கேமியோ நடித்துவிட்டு போயிருக்கிறார்கள் அதுபற்றி விலாவாரியாக பார்ப்போம்..

ரஜினி : தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகராக வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் நடிப்பீர் கடைசியாக வெளியான ஜெயிலர் 600 கோடிக்கு மேல் வசூல் அள்ளி மாபெரும் வெற்றி பெற்றது இப்படிப்பட்ட ரஜினி ஷாருக் கான் நடிப்பில் உருவான ரா ஒன் திரைப்படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது..

பிரதீப்பை தொடர்ந்து ரெட் கார்டு கொடுக்க மற்றொரு ஆண் போட்டியாளரை தேர்ந்தெடுத்த சூனியக்காரி மாயா, ஐஷு.! என்னடா நடக்குது இங்க..

அஜித் : தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு மார்க்கெட்டை உருவாக்கி வைத்திருக்கும் அஜித் வருடத்திற்கு ஒரு படத்தில் நடித்து வருகிறார்.  இவர் நடிப்பில் கடைசியாக வெளியான துணிவு பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த நிலையில் அடுத்து விடாமுயற்சி படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் இவர் இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்திற்காக கேமியோ ரோலில் நடித்திருப்பார்.

விஜய் : தமிழ் சினிமாவில் வசூல் சக்கரவர்த்தியாக வருபவர் தளபதி விஜய் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான லியோ திரைப்படம் 500 கோடிக்கு மேல் வசூல் அள்ளி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது இப்படிப்பட்ட விஜய் ரவுடி ரத்தோர் திரைப்படத்தில் வரும் ஒரு பாடலுக்கு சின்னதாக நடனமாடி இருப்பார்.

69 வயதில் கமலின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? ரஜினி, விஜயை விட குறைவு தான்..

தனுஷ் : தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான திருச்சிற்றம்பலம், வாத்தி என அனைத்து படங்களும் வெற்றி பெற்ற நிலையில் கேப்டன் மில்லர் படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் இப்படிப்பட்ட தனுஷ் வை ராஜா வை படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ஒரு முக்கியமான ரோலில் வந்து போவார்.

சூர்யா : கங்குவா திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வரும் சூர்யா.. லோகேஷ் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவான விக்ரம் திரைப்படத்தில் கிளைமேக்ஸ் காட்சியில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அந்த கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.