பிரதீப்பை தொடர்ந்து ரெட் கார்டு கொடுக்க மற்றொரு ஆண் போட்டியாளரை தேர்ந்தெடுத்த சூனியக்காரி மாயா, ஐஷு.! என்னடா நடக்குது இங்க..

Bigg Boss season 7 Tamil: பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரதீப்பை தொடர்ந்து ரெட் கார்ட் கொடுக்க மாயா, பூர்ணிமா, ஐஷூ மூவரும் ஆண் போட்டியாளரை டார்கெட் செய்திருக்கும் நிலையில் அது குறித்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த சீசனின் டைட்டில் வின்னர் பிரதீப் தான் என மக்கள் முடிவு செய்திருந்தார்கள்.

ஆனால் இந்த சூழலில் கடந்த வாரம் திடீரென ரெட் கார்டு கொடுக்கப்பட்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். இவரால் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, மிகவும் தவறாக பேசுகிறார் என பல குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டது.

69 வயதில் கமலின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? ரஜினி, விஜயை விட குறைவு தான்..

எனவே பெண் போட்டியாளர்களின் வலியுறுத்தலின் பெயரில் கமல்ஹாசன் பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும் எனக் கூறி பிரதீப்பை பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி உள்ளார். இந்த சூழலில் இந்த வாரம் மாயா கேப்டனாக பதவி ஏற்றிருக்கும் நிலையில் பிக் பாஸ் வீடு கலவர பூமியாக மாறி உள்ளது.

திட்டமிட்டு 6 பேரை ஸ்மால் பாஸ் வீட்டிற்கு அனுப்பி வைத்ததோடு மட்டுமல்லாமல் அவர்களை வேலை செய்ய சொல்லி டார்ச்சர் செய்வதும் தற்பொழுது வெளியாகி இருக்கும் ப்ரோமோக்களில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் இதனை தொடர்ந்து பிரதீப்பை போல் மற்றொரு போட்டியாளரையும் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்ற மாயா  திட்டமிட்டு இருக்கும் வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது.

KH 234 Update : 8 வருடங்களுக்குப் பிறகு கமலுடன் இணையும் முன்னணி நடிகை.! லிப்லாக் இருக்குமே..

அதாவது பெட்ரூமில் ஐஷூ மற்றும் பூர்ணிமாவுடன் உரையாடும்பொழுது வைல்ட் கார்டு போட்டியாளராக வந்துள்ள பிராவோ நடந்து போகும் போது கூட அப்படியே குறுகுறுவென பார்ப்பதாக சொல்கிறார். அதற்கு ஐஷூவும் ஆமாம் என கூறி அவர் ரொம்ப தப்பு தப்பா பார்ப்பதாக சொல்கிறார் இதை கேட்டுக் கொண்டிருந்த பூர்ணிமா ஷாக்காக ஐஷூ அவன் மூஞ்ச பார்த்து கூட பேச மாட்டான் என சொல்ல உடனே மாயா பூர்ணிமாவின் உடையில் கை வைத்து நீங்க நடந்து போகும்போது எல்லா இடத்தையும் பார்க்கிறான் என சொல்ல அதற்கு ஐஷூவும் ஜால்ரா அடிக்கிறார்.