இந்த வார நாமினேஷனில் சிக்கிய 8 பெரிய புள்ளிகள்.! தப்பித்த பிக் பாஸின் எடுபுடி

Bigg Boss Nomination List: பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வார நாமினேஷனில் எந்தெந்த போட்டியாளர்கள் சிக்கி உள்ளனர் என்பது குறித்து பார்க்கலாம். பிக் பாஸ் 7வது சீசன் தொடங்கி 50 நாட்களை கடந்திருக்கும் நிலையில் 18 போட்டியாளருடன் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சி தற்போது 14 போட்டியாளர்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது.

ஆட்கள் குறைந்திருந்தாலும் சண்டை சச்சரவுகளுக்கு பஞ்சமில்லை மேலும் நாள்தோறும் பலவிதமான புதிய டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு வருவதனால் அனைத்து போட்டியாளர்களும் நூறாவது நாளை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றனர். இவ்வாறு இந்த சூழலில் மூன்று பேர் வைல்ட் கார்டில் என்ட்ரி கொடுக்க இருப்பதாக பிக் பாஸ் அறிவித்துள்ளார்.

வைல்ட் கார்டு என்ட்ரி கொடுக்கும் மூன்று போட்டியாளர்கள் இவர்கள்தான்.! பரபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி..

அதாவது வைல்ட் கார்ட் என்ட்ரி கொடுக்கும் போட்டியாளர்களுடன் பிக் பாஸ் போட்டியாளர்களுக்கும் இடையே டாஸ்க் நடைபெறும் எனவும் அதில் யார் தோல்வி பெறுகிறார்களோ அதில் மூன்று பேர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே இதனால் அனைத்து ஹவுஸ் மேட்ஸ்களும் ஒன்றிணைந்து விளையாட உள்ளனர். இது குறித்து பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில் இதனை அடுத்து இந்த வாரம் நாமினேஷனில் சிக்கி உள்ள போட்டியாளர்கள் குறித்து பார்க்கலாம். அதன்படி மாயா, அர்ச்சனா, பூர்ணிமா, விசித்ரா, மணி ரவீனா மற்றும் இதுவரையிலும் எதுவுமே செய்யாமல் அமைதியாக இருந்து வரும் பிராவோ, அக்ஷயா போன்றவர்களும் நாமினேட் ஆகியுள்ளனர்.

தியேட்டரில் பேய் ஓட்டம் ஓடும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்.. கார்த்திக் சுப்புராஜ் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

இவ்வாறு நாமினேஷனில் சிக்கி இருக்கும் 8 பேரில் சுவாரஸ்யம் குறைந்தவர்களாக பிராவோ மற்றும் அக்ஷயா இருந்து வருவதனால் இந்த வாரம் இவர்களில் ஒருவர் நாமினேட்டாக அதிக வாய்ப்புள்ளது  இருவருமே நாமினேட் ஆனாலும் மகிழ்ச்சிதான். மேலும் நாமினேஷனில் சரவண விக்ரம் சிக்கவில்லை பிக் பாஸ் கூறும் டோர் மூடும் வேலையை மட்டுமே பார்த்து வரும் நிலையில் இந்த வாரம் தப்பித்துள்ளார்.