நிக்சன் கேப்டன்சிக்கு ஆப்பு வைக்க நினைக்கும் மாயா.! ஆதரவாக இருக்கும் பூர்ணிமா.. சூனியக்காரிகளுக்குள் வெடித்த பிரச்சனை

Bigg Boss 7 Tamil today promo 3: பிக் பாஸ் நிகழ்ச்சி தொடர்ந்து ஏராளமான புதிய டாஸ்க்களுடன் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் இதுவரையிலும் ஒன்றாக சுற்றி வந்த மாயா, பூர்ணிமா சண்டை போட தொடங்கியுள்ளனர். சூனியக்காரிகளான மாயா, பூர்ணமா இருவரும் தன்னுடைய ஏஜென்ட் டீம் மூலம் பல வேலைகளை செய்து வந்ததால் மக்கள் கடும் கோபத்தில் இருக்கின்றனர்.

எனவே தொடர்ந்து பூர்ணிமா தனக்கு நெகட்டிவ் விமர்சனங்கள் வந்து கொண்டிருப்பதனால் இதனை சரி செய்ய வேண்டும் என நினைக்கிறார். அதேபோல் மாயாவும் நெகட்டிவ் விமர்சனங்களால் அமைதியாக இருந்து வரும் நிலையில் தற்போது இவர்கள் அடித்துக் கொள்ள ஆரம்பித்துள்ளனர்.

புது கார், சாக்கு மூட்டையில் பணம்.. பிரபல நடிகரை அசத்திய விஜயகாந்த்..! மறக்க முடியாத தருணம்..

57 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்பொழுது ஆரம்பத்திலேயே பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அனன்யா ராவ் மற்றும் விஜய் வர்மா இருவரும் என்ட்ரி கொடுத்து இருக்கின்றனர். இவர்கள் கூறும் ஏராளமான விஷயத்தை ஹவுஸ் மேட்ஸ்கள் தவறாக புரிந்து கொள்கிறார்கள்.

மறுபுறம் இந்த வார கேப்டனாக நிக்சன் இருக்கும் நிலையில் இவருடைய கேப்டன்சியில் ஏதாவது குற்றச்சாட்டு இருந்தால் மணி அடித்து அதனை கூற வேண்டும் இதனை ஹவுஸ் மேட்ஸ்கள் அனைவரும் ஏற்றுக் கொண்டால் அவர் இந்த வாரம் நேரடியாக நாமினேஷனுக்கு அனுப்பப்படுவார் என்று பிக் பாஸ் அறிவித்துள்ளார்.

பிக்பாஸ் வீட்டில் இதுதான் நடக்குது.. புதுசா ஒன்னும் சொல்லிக்கறதுக்கு இல்ல – வெளுத்து விட்ட நடிகை ராதிகா

எனவே மாயா நிக்சனுக்கு எதிராக விளையாடி வரும் நிலையில் ஆதரவாக பூர்ணிமா உள்ளார். அதாவது தற்பொழுது வெளியாகி இருக்கும் இன்றைய மூன்றாவது ப்ரோமோவில் விஷ்ணு மணி அடித்து நான் உங்களை வெட்ட சொன்னனா அப்படி என்று கேட்டார் ஆனால் அவர்தான் வெட்ட சொன்னாரு என நிக்சனை கூற இதற்கு நிக்சன் யாரையுமே கேட்காம லைட்ட பத்த வச்சது உங்களுடைய தப்பு.

நான் முடிவே பண்ணலையே என்று கூற அனைவரும் கிளம்பி செல்கின்றனர். அப்பொழுது மாயா வேற ஏதாவது ரூல்ஸ் மாத்துனா சொல்லுங்க நிக்சன் என்று கூறுகிறார். இதனை அடுத்து பூர்ணிமா மாயாவிடம் போர்டுல போயி எதுவும் எழுதல அதுக்குள்ள நான் சமைக்க ஆரம்பிச்சுட்டேன் என்று சொன்னதே நான் தான் என சொல்ல அதற்கு மாயா அப்படினா நீங்க நிக்சனா சேவ் பண்ண நினைக்கிறீங்க இது ரொம்ப தப்பா இருக்கு என்று சொல்கிறார்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்