விதி மீறி பொருட்களை மறைத்து வைத்த ஏஜென்ட் டீம்.! தந்திரமாக கண்டுபிடித்த கேப்டன் தினேஷ்.. பலிக்காடான விசித்ரா

Bigg Boss 7 Tamil today promo 2: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது கடுமையான டாஸ்க்கள் நடைபெற்று வரும் நிலையில் ஹவுஸ் மேட்ஸ்கள் தோற்றதால் வீட்டில் இருக்கும் சர்க்கரை மற்றும் உப்பு இரண்டும் பிக் பாஸால் பறிக்கப்பட்டு இருக்கிறது.

அதாவது போட்டியாளர்களுக்கிடையே சுவாரசியத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக பிக் பாஸ் வீட்டில் இருந்து இதற்கு முன்பு வெளியேறிய பழைய ஹவுஸ் மேட்ஸ்கள் மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வர இருப்பதாக அறிவித்துள்ளார். அதாவது மூன்று டாஸ்க்குகள் நடைபெறும் எனவும் அதில் ஹவுஸ் மேட்ஸ்கள் அனைவரும் தோற்றுவிட்டால் மூன்று போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்படுவார்கள்.

இந்த 3 ஹீரோ கூட படம் பண்ணும் போது ரொம்ப பாதுகாப்பாக இருப்பேன் – நடிகை ஜோதிகா

இதற்கு பதிலாக ஏற்கனவே பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற மூன்று போட்டியாளர்கள் என்ட்ரி கொடுப்பார்கள் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே நேற்று முதல் பூகம்பம் டாஸ்க்கில் பிக் பாஸ் ஹவுஸ் மேட்ஸ்கள் தோற்றுவிட்டனர் இன்று அடுத்தடுத்த டாஸ்கள் நடைபெற்று வருகிறது.

இதில் ஜெயிப்பார்களா? தோப்பார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் இந்த சூழலில் தற்பொழுது வெளியாகி இருக்கும் இன்றைய இரண்டாவது ப்ரோமோவில் இந்த டாஸ்க்கில் தோற்றால் வீட்டில் இருக்கும் சர்க்கரை அல்லது உப்பை இந்த வாரம் முழுவதும் ஹவுஸ் மேட்ஸ்கள் பயன்படுத்த அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

மழையில் நனைந்தபடி மொத்த அழகையும் காட்டிய தர்ஷா குப்தா.. வைரலாகும் ஹாட் புகைப்படங்கள்.!

எனவே ஜோவிகா, பூர்ணிமா சர்க்கரை மற்றும் உப்பை எடுத்து கேமராவுக்குப் பின் மறைத்து வைக்கின்றனர். நடைபெற்ற டாஸ்க்கில் அனன்யா தோற்றதால் அனைவரும் தோற்று விடுகின்றனர். உடனே பிக் பாஸ் சர்க்கரை மற்றும் அதை சார்ந்த பொருளையும் ஸ்டோர் ரூமில் வைக்குமாறு சொல்கிறார். உடனே கேப்டன் ஆன தினேஷ் மறைத்து வைத்த பொருட்களை கண்டுபிடித்து விட்டு அதில் விசித்ரா என்ற பெயரையும் எழுதி வைத்துள்ளனர். பிறகு தினேஷ் திருடனாக இருந்தாலும் ஒரு கௌரவம் வேண்டாமா என்று கேட்க்கிறார்.