அட்ரா சக்க அந்தர் பல்ட்டி… பூர்ணிமாவுக்கு சொம்பு தூக்கிய அர்ச்சனா.. வயித்தெரிச்சலில் மாயா.. டான்ஸ் மாரத்தான் ரிசல்ட் இதோ.

Bigg Boss 7 Tamil today promo 2: 70 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் டான்ஸ் மாரத்தான் டாஸ்க் நடைபெற்று வருகிறது இதில் அனைத்து போட்டியாளர்களும் தங்களால் முடிந்த வரை பெஸ்ட்டை கொடுத்து வருகிறார்கள்.

அப்படி நேற்று அனைத்து போட்டியாளர்களும் நடனமாடி கலக்கிய நிலையில் இதனை அடுத்து இன்றும் அதற்கான டாஸ்க் நடைபெறுகிறது. அப்படி தற்பொழுது வெளியாகி இருக்கும் இன்றைய முதல் ப்ரோமோவில் மாயா, ரவீனா இருவரும் சேர்ந்து நடனமாட ஆனால் சரியாக மாயா நடனமாட வில்லை ரவீனா எல்லாத்தையும் சரியாக செய்ததாக பூர்ணிமா கூறினார்.

லோகேஷின் 10 நிமிட வீடியோவை பல கோடி கொடுத்து வாங்கிய ஓடிடி நிறுவனம்.. அப்படி என்ன வீடியோ டா அது?

எனவே இதனால் கடுப்பான மாயா பூர்ணிமாவிடம் உங்களால் தான் சொல்ல வேண்டும் என்று நினைப்பதை சொல்ல முடியவில்லை என கூற இதற்கு மேல் இதை பத்தி பேச ஒன்னும் இல்லை என கடுப்பாகி அந்த இடத்திலிருந்து பூர்ணிமா கிளம்பி விடுகிறார்.

இதனை அடுத்து தற்போது வெளியாகியிருக்கும் இரண்டாவது ப்ரோமோவில் பிக் பாஸ் தங்களோட கதாபாத்திரத்தில் சிறப்பாக பர்பாமன்ஸ் செய்த இரண்டு போட்டியாளர்களை தேர்ந்தெடுத்து கூறுமாறு கூறுகிறார். அதன்படி மணி, விசித்ரா, விஷ்ணு, ரவீனா ஆகியோர்கள் அர்ச்சனா மற்றும் தினேஷை கூறுகின்றனர்.

வேட்டையாட ஆரம்பித்த விஜயகாந்த்.. உச்சகட்ட மகிழ்ச்சியில் தொண்டர்கள் , ரசிகர்கள் வைரலாகும் வீடியோ

இதில் அர்ச்சனா டிக்கட் டு பினாலே செல்ல முடியாது என்பதால் இவருடைய வாய்ப்பை வேறு ஒருவருக்கு தருமாறு பிக்பாஸ் சொல்கிறார். இதற்கு அர்ச்சனா நான் பூர்ணிமாவுக்கு கொடுக்கணும்னு நினைக்கிறேன் என்று சொல்ல பூர்ணிமா அதிர்ச்சி அடைகிறார். மேலும் மாயா இவங்களோட ஃபேவரிட்சம் என்னுடைய கேமை பாதிக்கிறது என்று சொல்கிறார். பிறகு பூர்ணிமா உடனே அர்ச்சனாவை கட்டிப்பிடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார்.