அந்தக் கருப்பாடு நீ தானா.. மாயா மீது கடும் கோபத்தில் பொருளை தூக்கி போட்டு உடைக்கும் பூர்ணிமா

Bigg Boss 7 Tamil today promo 2: 70 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கிடையே கொஞ்சம் கூட ஒத்துமை இல்லாமல் சண்டை சச்சரவுகளுக்கு பஞ்சம் இல்லாமல் இருந்து வருகிறது. இவ்வாறு இன்னும் சில வாரங்கள் மட்டுமே இருப்பதனால் போட்டியாளர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

அப்படி நாள்தோறும் வித்தியாசமா டாஸ்க்களுடன் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்று கிரண்டு ஃபினாலே செல்வதற்கான டாஸ்க் நடைபெற்றது. இதில் விளையாடுவதற்கான தகுதியை அர்ச்சனா மற்றும் விஜய் வர்மா இழந்துள்ளனர். இதனை அடுத்து இன்று டான்ஸ் மாரத்தான் நடைபெற்று வருகிறது இதில் அனைத்து போட்டியாளர்களும் நடனமாடியும், காமெடி செய்தும் வருகின்றனர்.

படையப்பா ரஜினி போல் முன்னேற போகும் பாக்கியா.! கோபிக்கு நறுக்குன்னு குட்டு வைத்த ராதிகா..

இதில் நன்றாக பர்ஃபார்மன்ஸ் செய்யும் போட்டியாளர்களுக்கு பணம் கொடுப்பது போன்று அமைக்கப்பட்டுள்ளது. மேலும் சில டாஸ்க்குகளும் கொடுக்கப்பட்டிருக்கும் நிலையில் அதனை சரியாக செய்யாத காரணத்தினால் பிக் பாஸ் அனைத்து போட்டியாளர்களையும் எச்சரிக்கிறார்.

அதாவது இன்றைய இரண்டாவது ப்ரோமோவில் போர்டுல என்ன எழுதினாலும் பார்த்துகிட்டு சும்மா இருப்பேன்னு நினைச்சீங்களா என பிக் பாஸ் அனைவரையும் எச்சரிக்கிறார். பிறகு மாயாவிடம் பேசிக் கொண்டிருக்கும் பூர்ணிமா எனக்கு எதுவும் தேவையில்லை என பணத்தை தள்ளி விட்டு விட்டு நீங்க தப்பிக்கணும் அவ்வளவுதானா என கூறிவிட்டு கோபத்துடன் கிளம்புகிறார்.

அவமானங்களையும், அவதூறுகளையும் அன்பளிப்பாக கொடுத்தவர்களுக்கு நன்றி.. அமீர் பேச்சு.!

இந்த வீட்டில இருக்கறவங்களுக்கு விதிமுறைகளை மதிக்கும் தன்மை இல்லை என்பதை இப்ப எனக்கு தெரிந்துவிட்டது. ஐ அம் வெரி வெரி டிஸ்அப்பாண்டட் என பிக் பாஸ் கூற அனைத்து ஹவுஸ் மேட்ஸ்சுகளும் அமைதியாக நின்று கொண்டிருக்கின்றனர்.