மிரட்டிய பூர்ணிமாவிற்கு கமல் கொடுத்த சரியான பதிலடி.. கமலையே கேள்வி கேட்கும் விஷ்ணு.! அனல் பறக்கும் ப்ரோமோ

Bigg Boss 7 Tamil today promo 1: பிக் பாஸ் நிகழ்ச்சி 50 நாட்களைக் கடந்து சுவாரஸ்யமாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் கமலின் எபிசோடுக்காக வாரம் தோறும் ரசிகர்கள் காத்து வருவது வழக்கம். அப்படி இந்த வாரம் நேற்றைய விட இன்று தான் போட்டியாளர்களை கராராக கண்டித்துள்ளார் கமல்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் மேலும் சுவாரஸ்யத்தை உண்டாக்க வேண்டும் என்பதற்காக வந்ததிலிருந்து எதுவுமே செய்யாமல் அமைதியாக இருந்த பிராவோ, அக்ஷயா இருவரும் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற உள்ளார்கள். சனி கிழமையான நேற்று மக்கள் மத்தியில் குறைவான வாக்குகளை பெற்று பிராவோ வெளியேறினார்.

பிக் பாஸ் கொடூரம் வனிதாவின் முகத்தில் தாக்கிய பிரதீப்பின் ரசிகர்.! ரத்தம் சொட்ட சொட்ட வனிதா வெளியிட்ட பதிவு.!

இவரை அடுத்து இன்று அக்ஷயா வெளியேறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ரசிகர்களின் எதிர்பார்ப்பு படி பூர்ணிமா தான் இந்த வாரம் வெளியேறி இருக்க வேண்டும் ஆனால் சூனியக்காரி வெளியேறாததால் ரசிகர்கள் செம கடுப்பில் இருந்து வருகின்றனர். அடுத்த வாரமாவது இவர் வெளியேறுவாரா என்ற எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

கடந்த இரண்டு வாரங்களாக தினேஷ் கேப்டனாக இருந்த நிலையில் இந்த வாரம் நிக்சன் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதோடு மட்டுமல்லாமல் நடைபெற்ற பூகம்பம் டாஸ்க்குகளில் ஒரு டாஸ்க்கில் மட்டுமே ஹவுஸ் மேட்ஸ்கள் வெற்றி பெற்றுள்ளனர். எனவே ஏற்கனவே பிக் பாஸ் வீட்டை விட்டு ஆரம்பத்திலேயே வெளியேறிய அனன்யா ராவ் மற்றும் விஜய் வர்மா என்ட்ரி கொடுக்க இருப்பதாக கூறப்படுகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு என்ட்ரி கொடுக்கும் 2 பேர் இவர்கள்தான்.! பிரதீப் வராததால் கடுப்பில் ரசிகர்கள்..

இதனால் மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சுவாரஸ்யம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் தற்பொழுது வெளியாகி இருக்கும் இன்றைய முதல் ப்ரோமோவில் கமல்ஹாசன் விமர்சனத்தை ஏற்றுக் கொள்ளாத மனப்பக்குவம் இல்லாதவர்கள் யார் என கேட்க இதற்கு நிக்சன், ஜோவிகா, விஷ்ணு அனைவரும் அர்ச்சனா என கூறுகின்றனர்.

மேலும் விஷ்ணு ஆரம்பத்தில் இரண்டு வாரங்களாக ஸ்மால் பாஸ் வீட்டில் இருந்த பொழுது அர்ச்சனா அழுது கொண்டே இருப்பதாக சொல்கிறார். இதற்கு அர்ச்சனாவும் பேச ஒரு கட்டத்தில் விஷ்ணு மேடம் என்ன பண்ணாங்கன்னு தெரியல சார் என்று கமலை கேள்வி கேட்க இதனால் கடுப்பான கமல் எனக்கு ஞாபகப்படுத்துறீங்க நீங்க நான் எதையெதையெல்லாம் விமர்சிக்கனும்னு நீங்க முடிவு பண்ண முடியாது. இந்த வார கடைசியில் இத கேக்கலைன்னா பாருங்கன்னு சொல்றீங்க என்னா பண்ணிடுவீங்க என்ன என்று கூற இதனை சொன்ன பூர்ணிமா முகம் மாறுகிறது.