பிக் பாஸ் வீட்டில் அடுத்த பூகம்பம்.! டாஸ்க் 2.. ஜெயித்தார்களா ஹவுஸ் மேட்ஸ்கள்?

Bigg Boss 7 Tamil today promo 1: பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொடர்ந்து நாள்தோறும் புதிய டாஸ்க்கள் அறிமுகமாகி வரும் நிலையில் ஹவுஸ் மேட்ஸ்கள் அனைவரும் மும்பரமாக விளையாடி வருகின்றனர். இத்தனை நாட்களாக ஆட்டம் போட்டு வந்த பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு பிக் பாஸ் தரமான சம்பவத்தை செய்து வருகிறார்.

அதாவது இந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய மூன்று போட்டியாளர்கள் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வரப்போவதாகவும் எனவே டாஸ்க் நடைபெறுவதில் பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் ஜெயித்துவிட்டால் அந்த போட்டியாளர்கள் வரமாட்டார்கள் தோற்று விட்டால் உள்ள இருக்குற மூன்று பேர் வெளியேற்றப்பட்டு வெளியில் இருக்கிற மூன்று பேர் உள்ளே வரப்போறாங்க என்று கூறப்படுகிறது.

ஹவுஸ்ஃபுல் ஆனதால் அஜித் படத்தை நின்று கொண்டே பார்த்த சிம்பு.. தல மேல அவ்வளவு பாசம்.!

இதற்கு மூன்று டாஸ்க்கள் நடைபெற இருப்பதாகவும் அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்று நடந்த டாஸ்க்கில் பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் தோற்றுவிட்டனர் இதனை அடுத்து இரண்டாவது பூகம்பம் டாஸ்க் இன்று நடைபெறுகிறது. ஒரு முக்கோண பலகை கொடுக்கப்பட்டிருக்கிறது அதில் இருக்கும் இரண்டு பந்துகளை அந்த பலகையில் இருக்கும் இரண்டு ஓட்டைகளிலும் சரியாக விழ வைக்க வேண்டும் அதுதான் டாஸ்க்.

இதில் முதலில் விஷ்ணு விளையாடி ஜெயித்து விடுகிறார் இவரை அடுத்து ஜோவிகா விளையாடிக் கொண்டிருக்கிறார். இதில் இவர்கள் ஜெயித்தார்களா? இல்லையா? என்பதை இனிவரும் ப்ரோமோக்களில் தெரிந்து கொள்ளலாம். அனைவரும் எப்படியாவது இதில் ஜெயித்தாக வேண்டும் என்ற நோக்கத்துடன் இருந்து வருகின்றனர்.

ரோகினிக்கு போன் பண்ணி 50,000 கேட்ட வசீகரன்.. சந்தோஷத்தில் மீனாவை தூக்கிய முத்து – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்

இவ்வாறு கடுமையான டாஸ்க்குகளுக்கு இடையே பரபரப்பாக பிக் பாஸ் ஷோ ஒளிபரப்பாகி வருகிறது. இவ்வாறு அப்படி பிக் பாஸ் போட்டியாளர்கள் தோற்றுவிட்டால் பிரதீப் வரவேண்டும் என ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் எதிர்பார்த்து வருகின்றனர். பிரதீப் வந்தால் ஆட்டமே வேறு மாதிரி இருக்கும் என்று கூறப்படுகிறது.