ஹவுஸ்ஃபுல் ஆனதால் அஜித் படத்தை நின்று கொண்டே பார்த்த சிம்பு.. தல மேல அவ்வளவு பாசம்.!

Simbu : திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின் ஹீரோ அவதாரம் எடுத்தார். முதலில் காதல் அழிவதில்லை  தொடர்ந்து காதல் சம்பந்தப்பட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் அந்த சமயத்தில் இவருக்கு லிட்டில் சூப்பர் ஸ்டார் என பெயரும் கொடுக்கப்பட்டது.

அப்பொழுது ரஜினி ரசிகர் என கூறி வந்த இவர் திடீரென அஜித் ரசிகராக அவதாரம் எடுத்தார். அதனை பல பேட்டிகளில் கூட வெளிப்படையாக கூறி இருக்கிறார். அதன் பிறகு அஜித் பிறந்தநாள் மற்றும் விழாக்களில் அஜித்துடன் நெருங்கி வந்தார் சிம்பு. இப்படிப்பட்ட சிம்பு அஜித்துடன் நடிக்க ஆசைப்பட்டார்.

தமிழுக்கு சமாதி கட்ட விருது விழாவிற்கு வந்த அர்ஜுன்.! குண்டூசி முதல் கோனுசி வரை மறைக்கும் நமச்சி..

ஆனால் அது தற்பொழுது வரையும் நடைபெறவில்லை. இருந்தாலும் சிம்பு அஜித்தின் படத்தையாவது முதல் நாள் முதல் ஷோ பார்த்துவிடுவார் அப்படி வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான மங்காத்தா திரைப்படத்தை முதல் நாள் முதல் ஷோ பார்க்க சத்தியம் தியேட்டருக்கு சென்று இருக்கிறார்.

ஆனால் அங்கு படம் ஹவுஸ் ஃபுல் ஆனதால் டிக்கெட் கிடைக்கவில்லையாம் இதனால் அடுத்த ஷோ வெயிட் பண்ணி பார்த்துவிடலாம் என சிம்பு முடிவு செய்தார் ஆனால் அப்பொழுதும் டிக்கெட் புல் ஆனதால் வேறு வழி இல்லாமல் சத்தியம் தியேட்டருக்குள் உள்ளே நுழைந்து நின்று கொண்டே முழு படத்தையும் பார்த்தாராம்..

ரோகினிக்கு போன் பண்ணி 50,000 கேட்ட வசீகரன்.. சந்தோஷத்தில் மீனாவை தூக்கிய முத்து – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்

அந்த அளவிற்கு அஜித்தின் தீவிர ரசிகராக சிம்பு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் செய்தி தெரிந்த ரசிகர்கள் இப்படி ஒரு வெறி புடிச்ச அஜித் ரசிகரா நீங்கள் என கூறி கமெண்ட் அடித்து லைக்குகளை தட்டி வீசி வருகின்றனர்.