ஒண்ணுமே இல்லாததற்கு இந்த 16 லட்சம் எவ்வளவு மேல்.. நூதனமாக திட்டம் போட்டு பெட்டியை தூக்கி பூர்ணிமா.. இதோ வீடியோ

Bigg Boss 7 Tamil today promo: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி பல சுவாரசியமான டாஸ்க்களுடன் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்போது நடைபெற்ற பணப்பெட்டி டாஸ்க்கில் 16 லட்ச ரூபாய் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு பூர்ணிமா பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி உள்ளார்.

18 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்பொழுது இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது இன்னும் இரண்டு வாரங்களில் பிக் பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக நிறைவடைய இருக்கும் நிலையில் கடைசி வாரத்தில் விஜய் வர்மா, பூர்ணிமா, மாயா, அர்ச்சனா, விசித்ரா, தினேஷ், மணி, விஷ்ணு ஆகிய எட்டு பேரும் மிஞ்சு உள்ளனர்.

அமைதியாக இருந்து காரியத்தை சாதித்த மகா.. ஹாஸ்பிடலில் ஐஸ்வர்யாவுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி – ஆஹா கல்யாணம் இன்றைய எபிசோட்

இவர்களில் யார் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு செல்வார்கள் என அதிகம் எதிர்பார்க்கப்பட்டது அப்படி விசித்ரா தான் ஆரம்பத்தில் பெட்டியை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு செல்வதாக கூறி வந்தார் ஆனால் திடீரென்று பண மதிப்பு அதிகரித்து கொண்டே இருந்ததால் பூர்ணிமா பணப்பெட்டியை எடுத்து சென்றுள்ளார்.

மாயாவுடன் சேர்ந்து கொண்டு பூர்ணிமா செய்த பல விஷயங்கள் ரசிகர்களை பெரிதலிலும் கடுப்பேற்றியது. எனவே பிக் பாஸ் வீட்டை விட்டு மாயா, பூர்ணிமாவை வெளியேற்ற வேண்டும் என பலரும் கூறி வந்தனர் இருந்தாலும் கடைசி வரையில் பிக் பாஸ் வீட்டில் இருந்த பூர்ணிமா தற்பொழுது இந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியுள்ளார்.

அமைதியாக இருந்து காரியத்தை சாதித்த மகா.. ஹாஸ்பிடலில் ஐஸ்வர்யாவுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி – ஆஹா கல்யாணம் இன்றைய எபிசோட்

இதனை அடுத்து தற்போது வெளியாகி இருக்கும் பிக் பாஸ் சீசன் 7 இன்றைய ப்ரோமோவில் 16 லட்சம் வந்தவுடன் நான் அந்த பணத்தை எடுத்துக்கிட்டு கிளம்புவதாக கூறுகிறார். பிறகு இந்த 16 லட்சத்தை பூர்ணிமா ரவி எடுத்துக்கிட்டு போறேன் எனக் கூறிவிட்டு அனைவரிடமும் நான் உங்களை அட்டாக் பண்ணதுக்கு ஐ அம் சோ சாரி என கீழ விழுந்து கும்பிடுகிறார். இதனை அடுத்து அனைவரும் ஆட்டம் பாட்டத்துடன் பூர்ணிமாவை வீட்டிற்கு அனுப்பி வைக்கின்றனர்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்