அவள அடையறதுக்கு தான் பிக் பாஸ் வந்தியா.. ரவீனா-மணியை வண்ட வண்டையாக கேட்கும் பேரன்ட்ஸ்… இதைவிட ஒரு அசிங்கம் தேவையா..

Bigg Boss 7 Tamil today promo 1: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வரும் நிலையில் தொடர்ந்த பல திருப்பங்களுடன் ஓடிக்கொண்டிருக்கிறது. அந்த வகையில் இறுதி வாரத்தை நோக்கி பிக் பாஸ் நிகழ்ச்சி நகர்ந்து கொண்டிருப்பதனால் தற்பொழுது ஃப்ரீஸ் டாஸ்க் நடைபெற்று வருகிறது.

இதில் தொடர்ந்து அனைத்து போட்டியாளர்களின் பெற்றோர்களும் ஒவ்வொரு நாளும் வந்து கொண்டிருக்கிறார்கள் அப்படி தொடர்ந்து தனது பிள்ளைகளுக்காக பெற்றோர்கள் அறிவுரை கூறிவரும் நிலையில் இன்று ரவீனாவின் வீட்டிலிருந்து வர திட்டி தீர்த்து உள்ளார்கள்.

வருத்தத்தில் இருந்த விஜய்.. வாய்ப்பு கொடுத்த எஸ்.ஜே சூர்யா.!

அதாவது பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பே மணி, ரவீனா இருவரும் நெருங்கிய நண்பர்கள் இருவரும் சோசியல் மீடியாவில் ஒன்றாக இருக்கும் ஏராளமான புகைப்படங்கள், வீடியோக்கள் வைரலானது எனவே இவர்கள் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது அதற்கு ஏற்றார் போல் இருவரும் பிக் பாஸ் வீட்டில் ஒன்றாக சுற்றி வந்தனர்.

என்னதான் இவர்களை போட்டியாளர்கள் விமர்சித்தாலும் அதனை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இருவருக்கும் மட்டுமே பேசி வந்தனர். இந்நிலையில் இதனால் கடுப்பான ரவீனாவின் குடும்பத்தினர்கள் தற்பொழுது எச்சரித்திருக்கும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் வீட்டில் பல போட்டியாளருக்கு டப் கொடுக்கும் விசித்ரா ஒரு நாளைக்கு எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் தெரியுமா.? பலருக்கும் தெரியாத தகவல்

இன்றைய முதல் ப்ரோமோவில்  ரவீனாவிடம் உன்னை நான் அறைந்து இருப்பேன் உன் மேல அவ்வளவு கோவம் வந்தது அம்மா எல்லாத்துக்கும் ஒத்துக்கிட்டாங்களா? சார் எல்லார்கிட்டயும் அம்மா ஒத்துக்கிட்டாங்க ஒத்துக்கிட்டாங்கன்னு சொல்லிக்கிட்டு இருக்க அவருக்காக விளையாட நீ வரல இது நமக்கு தேவை கிடையாது என பேசிக் கொண்டிருக்க இதனை எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கும் மணி திட்டுனாங்கனா காலுல விழுந்திட வேண்டியதுதான் என கூறுகிறார்.

இதனை அடுத்து மணி, ரவீனா இருவரையும் ஒன்றாக உட்கார வைத்து தனியா பேசுகின்றனர் அப்பொழுது தானியா உட்காரத்துக்கா வந்தீங்க ஷோவுக்கு இரண்டு பேரும் அவளை நீங்க கூப்பிட்டு வச்சு பேசுறது தயவு செஞ்சு இனிமே பண்ணாதீங்க என கரராக கூற மணி முகம் சோர்ந்து விடுகிறது.