அர்ச்சனா ஒரு பச்சோந்தி.. உண்மை முகத்தை புட்டு புட்டு வைக்கும் நிக்சன்

Bigg Boss 7 Tamil today promo 1: பிக் பாஸ் நிகழ்ச்சி 70 நாட்களைக் கடந்து விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் அறிமுகமான காலகட்டத்தில் இருந்து தற்போது வரையிலும் சண்டை சச்சரவுகளுக்கு பஞ்சம் இல்லாமல் இருந்து வருகிறது. மேலும் சமீப காலங்களாக பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்தால் மன உளைச்சல் ஏற்படுவதாக ரசிகர்களும் கூறி வருகின்றனர்.

பொதுவாக வாரத்தின் இறுதி நாட்கள் ஆன சனி, ஞாயிறு கமலின் எபிசோடுக்காக மக்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்து வருவது வழக்கம். ஆனால் தற்போது எல்லாம் கமல் வந்தாலே திட்டி தீர்த்து வருகிறார்கள். கமல் சரியாக ஹவுஸ் மேட்ஸ்களை எச்சரிக்கவில்லை எனவும் கழுவி ஊற்றி வருகிறார்கள்.

அர்ஜுனுக்கே விபூதி அடித்த நமச்சி… தமிழ் அடிமடியிலேயே கையை வைத்த அர்ஜுனின் மாமா.! கோதை சொல்றத இந்த முறையாவது கேளுங்க…

வைல்ட் கார்டில் என்ட்ரி கொடுத்த அர்ச்சனாவிற்கு மக்கள் மத்தியில் நல்ல ஆதரவு கிடைத்து வருகிறது. மேலும் அர்ச்சனாவிற்கும் ஹவுஸ் மேட்ஸ்களுக்கும் இடையே அடிக்கடி சண்டை நடைபெறுவது வழக்கமாக இருந்து வரும் நிலையில் கடந்த வாரம் நிக்சன், அதற்கு முந்தின வாரம் விஷ்ணு அர்ச்சனாவிற்கு இடையே நடைபெற்ற சண்டையை கமல் எச்சரித்தார்.

இந்நிலையில் தற்போது வெளியாக இருக்கும் இன்றைய ப்ரோமோவில் அர்ச்சனா மன்னிப்பு கேட்ட விஷயத்தை பற்றி நிக்சன் விஷ்ணுவிடம் பேசிக் கொண்டிருக்கிறார். அதில் அர்ச்சனா செய்தது தப்பு என்று உணர்ந்திருந்தால் அது கமல் சார் சொல்றதுக்கு முன்னாடியே மனிப்பு இப்ப கேட்டு இருக்கணும் விமர்சனங்கள் வரும் என்பதால் எல்லா மாறுகிறது பக்கா கேம் என கூறிக் கொண்டிருக்கிறார்.

Thani Oruvan 2 : அரவிந்த்சாமியை விட பவர்ஃபுல் வில்லனை தேர்வு செய்த தனி ஒருவன் 2 படக்குழு.. லிஸ்டில் இடம் பிடித்த 5 முன்னணி நடிகர்கள்

இவ்வாறு விஷ்ணு சில நாட்களாக அர்ச்சனாவிடம் பேசி வரும் நிலையில் இதற்காக நெக்சன் விஷ்ணுவிடம் அர்ச்சனா குறித்து வேண்டும் என்ற இதையெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறார். இவ்வாறு மக்கள் மத்தியில் குறைவான வாக்குகளை பெற்று நிக்சன் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.