பூர்ணிமாவிடம் வேலையை காமித்த காஜி தல.. ரொமான்ஸின் உச்சகட்டம்.. என்னடா நடக்குது இங்க?

Bigg Boss 7 Tamil: பிக் பாஸ் நிகழ்ச்சியில் தம்பி நிக்கனுடன் நெருக்கமாக பூர்ணிமா நடனம் ஆடும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாக ரசிகர்கள் கழுவி ஊற்றி வருகின்றனர். பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில் இன்னும் இரண்டு வாரங்களில் இருந்த சீசனின் டைட்டில் வின்னர் யார் என்பதை தெரிவிக்க உள்ளார்கள்.

எனவே மக்களும் ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்து வரும் நிலையில் போட்டியாளர்கள் அனைவரும் இறுதிக் கட்டத்திற்கு தயாராகி வருகிறார்கள். 85 நாட்களைக் கடந்து ஓடிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொடர்ந்து சண்டை சச்சரவுகளுக்கு பஞ்சம் இல்லாமல் இருந்து வருகிறது.

கார் ஷோரூம்க்கு வந்த ரவி, ஸ்ருதி.. ஜஸ்ட் மிஸ்ஸில் எஸ்கேப்பான மனோஜ் – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்

இந்நிலையில் தற்பொழுது கடுமையான டிக்கட் டூ ஃபினாலே டாஸ்க் நடைபெற்று வருகிறது. இவ்வாறு இது ஒரு புறம் இருக்க மறுபுறம் பூர்ணிமா நிக்சன் இருவரும் அக்கா தம்பி உறவு என இவர்கள் கூறுவது பல இடங்களில் பார்க்க முடிகிறது. அப்படி அக்கா தம்பி என தங்களை வெளிப்படுத்திக் கொண்ட நிக்சன் மற்றும் பூர்ணிமா இருவரும் வெண்ணிலவே வெண்ணிலவே என்ற பாடலுக்கு நெருக்கமாக நடனமாடி சக போட்டியாளர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளனர்.

பார்வையாளர்களும் என்னய்யா பண்றாங்க இவங்க என்பது போல் கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் பூர்ணிமா நிக்சன் ஆகிய இருவரும் ரொமான்ஸின் உச்சத்திற்கு சென்று நடனமாடி இருப்பதால் அக்கா தம்பி உறவில் உள்ளவர்களுக்கு இப்படி ஒரு நடனம் தேவைதானா?  எனக் கேள்வி எழுப்பி உள்ளார்கள்.

கார் ஷோரூம்க்கு வந்த ரவி, ஸ்ருதி.. ஜஸ்ட் மிஸ்ஸில் எஸ்கேப்பான மனோஜ் – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்

காஜித் தல நிக்சன் ஐஷூவுடன் செய்த சில்மிஷன் வேலைகளை பார்த்தோம் அதேபோல் அக்கா என பூர்ணிமாவையும் ஏற்றுக் கொண்ட நிக்சன் இதனை நன்றாக பயன்படுத்திக் கொண்டு பல இடங்களில் தனது சில்மிஷன் வேலைகளை காண்பித்து வருகிறார்.

இதற்குப் பூர்ணிமாவும் உடந்தையாக இருக்கும் நிலையில் பூர்ணிமா விஷ்ணுவை வெறுப்பேற்ற தான் இவ்வாறு செய்கிறார் எனவும் கூறப்படுகிறது. மேலும் பல இடங்களில் நிக்சன் பூர்ணிமா இருவரும் நெருக்கமாக இருக்கும் சில காட்சிகளும் பார்க்க முடிகிறது.