இந்த வாரம் வெளியேறும் புல்லிங் குரூப் உறுப்பினர்.. சூனியக்காரி மாயாவால் வந்த வினை.!

Bigg Boss Voting List: இந்த வாரம் குறைவான வாக்குகளைப் பெற்று பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறப் போகும் போட்டியாளர் குறித்து தெரியவந்துள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சி 50 நாட்களை வெற்றிகரமாக நிறைவு செய்து விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறது.

வாரம் தோறும் நாமினேஷனில் சிக்கப்படும் போட்டியாளர்களில் ஒருவர் மக்கள் மத்தியில் குறைவான வாக்குகளை பெற்ற அடிப்படையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் இந்த வாரம் நேரடியாக நாமினேஷன் செய்யப்பட்ட மாயா மற்றும் அக்ஷயா இவர்களை தொடர்ந்து அர்ச்சனா, விசித்ரா, மணி, ரவீனா, பிராவோ, பூர்ணிமா உள்ளிட்ட எட்டு பேர் நாமினேஷனில் உள்ளனர்.

விஜய்யின் லியோ உள்ளிட்ட இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் 5 தமிழ் திரைப்படங்கள்.!

அர்ச்சனா மற்றும் விசித்ராவிற்கு அதிக வாக்குகள் கிடைத்திருக்கும் நிலையில் இவர்கள்தான் முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளனர். இவர்களை அடுத்து மணி ரவீனாவை விட கடைசி மூன்று இடங்களில் பிராவோ, அக்ஷயா மற்றும் பூர்ணிமா இருப்பதாக கூறப்படுகிறது.

எனவே இவர்கள் மூவரில் மிகவும் குறைவான வாக்குகளை பூர்ணிமா பெற்றிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அக்ஷயா, பிராவோவை விட பூர்ணிமா வீட்டில் ஆக்டிவாக இருந்து வந்தாலும் இவர் மாயாவுடன் சேர்ந்து கொண்டு செய்த பல விஷயங்கள் மக்கள் மத்தியில் கடுப்பினை ஏற்படுத்தியது.

‘கங்குவா’ படப்பிடிப்பின் பொழுது விபத்தில் சிக்கிய நடிகர் சூர்யா.. மருத்துவமனையில் அனுமதி

எனவே புல்லிங் குரூப்பை பிரிக்க வேண்டும் என ரசிகர்கள் திட்டம் போட்ட நிலையில் அதே போல் புல்லிங் குரூப்பில் உறுப்பினராக இருக்கும் பூர்ணிமா வெளியேற அதிக வாய்ப்பு உள்ளது. இவர் வெளியேறி விட்டாலே மாயாவின் ஆட்டம் திண்டாட்டம் தான் மேலும் ஆட்டம் சூடு பிடிக்க தொடங்கும். 

இவ்வாறு பூர்ணிமாவிற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் இருப்பதனால் வெளியேற அதிக வாய்ப்பு உள்ளது ஆனால் இவரை விட எதுவுமே செய்யாமல் வீட்டில் வெட்டியாக இருந்து வருபவர்கள் தான் அக்ஷயா மற்றும் பிராவோ ஆரம்பத்தில் இருந்து அக்ஷயா எதுவும் பெரிதாக செய்யவில்லை என்பதால் அடுத்து இவர் வெளியேறினாலும் மகிழ்ச்சியாக தான் இருக்கும்.