‘கங்குவா’ படப்பிடிப்பின் பொழுது விபத்தில் சிக்கிய நடிகர் சூர்யா.. மருத்துவமனையில் அனுமதி

Actor Surya: நடிகர் சூர்யா படப்பிடிப்பின் பொழுது விபத்தில் சிக்கி காயமடைந்து இருப்பதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறாராம் இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாக திரை பிரபலங்கள், ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

நடிகர் சூர்யா தற்பொழுது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் கங்குவா படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீப காலங்களாக மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் இப்படத்தினை வைத்து தரமான சம்பவம் செய்ய வேண்டும் என்பதற்காக சூர்யா- சிறுத்தை சிவா காத்து வந்தனர்.

குணசேகரன் முன்னாள் காதலியிடம் உதவி கேட்கும் ஜனனி.. ஞானத்தை கிழித்து தொங்கவிட்ட தர்ஷன்

இந்த சூழலில் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தில் சூர்யாவிற்கு காயம் ஏற்பட்டு இருப்பதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாராம். சிறுத்தை சிவா அண்ணாத்த படத்தின் கலவை விமர்சனங்களுக்கு பிறகு சூர்யாவை வைத்து கங்குவா படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்க முக்கிய கேரக்டரில் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்தராஜ், ஜெகபதி பாபு உள்ளிட்ட பலரும் இணைந்து நடித்து வருகின்றனர். இவ்வாறு பிரம்மாண்டமான 3d டெக்னாலஜி உடன் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகி இருக்கும் இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நேரடியாக அடுத்த வார எவிக்ஷனுக்கு நாமினேட் செய்யப்பட்ட போட்டியாளர்.. பிக் பாஸ் வைத்த ட்விஸ்ட்.?

கங்குவா படம் தமிழகம் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் பல இடங்களில் படமாக்கப்பட்டு இருப்பதால் சுமார் 350 கோடி பட்ஜெட்டில் 10 மொழிகளில் உருவாகி வருகிறது. தற்பொழுது இறுதி கட்ட படப்பிடிப்பில் சூர்யா நடித்து வந்த நிலையில் திடீரென விபத்தில் சிக்கி காயமடைந்துள்ளாராம். அதாவது சண்டைக் காட்சியின் பொழுது கேமரா அருந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் அவரது தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டு இருப்பதாக படக் குழுவினர் மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்துள்ளனர். இந்த தகவல் திரைபிரபலங்கள், ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சினை ஏற்படுத்தியுள்ளது.