நேரடியாக அடுத்த வார எவிக்ஷனுக்கு நாமினேட் செய்யப்பட்ட போட்டியாளர்.. பிக் பாஸ் வைத்த ட்விஸ்ட்.?

Bigg Boss 7 Tamil today promo 2: பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொடர்ந்து நாள்தோறும் ஏராளமான புதிய டாஸ்க்கள் நடைபெற்று வரும் நிலையில் இன்று யார் நேரடியாக அடுத்த வாரம் நாமினேஷனுக்கு செல்ல வேண்டும் என்பதை பிக் பாஸ் ஹவுஸ் மேட்ஸ்கள் கலந்துரையாடி முடிவு செய்துள்ளனர்.

வெற்றிகரமாக 50 நாட்களை நிறைவு செய்து பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்பொழுது 3 பூகம்பம் டாஸ்க்கள் நடைபெற்று வருகிறது. அதாவது இந்த டாஸ்க்களில் பிக் பாஸ் ஹவுஸ் மேட்ஸ்கள் அனைவரும் ஜெயித்தால் வெளியேறிய பழைய ஹவுஸ் மேட்ஸ்கள் பிக் பாஸ் வீட்டிற்கு வரமாட்டார்கள் அப்படி இவர்கள் தோற்றுவிட்டால் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் மூன்று போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு ஏற்கனவே பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய மூன்று போட்டியாளர்கள் என்ட்ரி கொடுக்க இருப்பதாக பிக் பாஸ் அறிவித்துள்ளார்.

நான் ஒன்னும் லேசுபட்ட ஆள் கிடையாது.. விஜயுடன் நடனமாடிய பிக்பாஸ் விசித்ரா – எந்த படத்தில் தெரியுமா.?

அப்படி என்று மூன்றாவது பூகம்பம் டாஸ்க் நடைபெறுகிறது நேரடியாக ஒரு போட்டியாளரை மற்ற போட்டியாளர்கள் தேர்வு செய்ய வேண்டும் என பிக் பாஸ் அறிவித்துள்ளார். வழக்கம் போல் இன்று நடைபெற்ற டாஸ்க்கிலும் தோற்றுவிட்டனர். இதனை அடுத்து அடுத்த வார எவிக்ஷனுக்கு நேரடியாக எந்த போட்டியாளரை தேர்வு செய்வது என்பது குறித்து அனைவரும் தங்களது கருத்துக்களை தெரிவிக்கிறார்கள்.

அப்படி அர்ச்சனா, விசித்ரா, பூர்ணிமா, விஷ்ணு, மாயா, தினேஷ் ஆகியவர்கள் அடுத்தடுத்து தங்களது கருத்துக்களை கூறியிருக்கும் நிலையில் இந்த வார கேப்டனான தினேஷ் தான் எவிக்ஷனுக்கு நேரடியாக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறாரோ என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனென்றால் அந்த ப்ரோமோவில் இவர் தான் மிகவும் கோபமாகவும் ஆச்சரியமாகவும் உள்ளார். இது குறித்து இனிவரும் ப்ரோமோக்களில் உண்மை என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.