விஜய்யின் லியோ உள்ளிட்ட இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் 5 தமிழ் திரைப்படங்கள்.!

OTT Movies: வாரம் தோறும் வெள்ளிக்கிழமை அன்று ஓடிடியில் புதிய திரைப்படங்கள் வெளியாகி வரும் நிலையில் இந்த வாரம் விஜய்யின் லியோ உள்ளிட்ட 5 தமிழ் திரைப்படங்கள் ரிலீஸ் ஆக உள்ளது. அதாவது சமீப காலங்களாக தொடர்ந்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகி பல கோடி வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது.

இவ்வாறு திரையரங்குகளில் கொண்டாடப்படும் படங்கள் சில வாரங்கள் கழித்து ஓடிடி-யில் வெளியாகுவது வழக்கம் அந்த வகையில் திரையரங்குகளில் எந்த அளவிற்கு வரவேற்பு கிடைத்து வருகிறதோ அதே போல் ஓடிடியில் வெளியாகும் படங்களை பார்ப்பதற்கும் தனி ரசிகர் பட்டாளம் இருந்து வருகின்றனர்.

‘கங்குவா’ படப்பிடிப்பின் பொழுது விபத்தில் சிக்கிய நடிகர் சூர்யா.. மருத்துவமனையில் அனுமதி

அந்த வகையில் ஓடிடி ரசிகர்களுக்கு இந்த வாரம் மிகவும் மகிழ்ச்சியான வாரமாக அமைந்துள்ளது. அதாவது தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் திரையரங்குகளில் அக்டோபர் மாதம் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த லியோ திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வருகின்ற வெள்ளிக்கிழமை அன்று வெளியாகிறது.

அதேபோல் சித்தார்த் நடிப்பில் வெளியான ‘சித்தா’ ஹாட்ஸ்டார், ‘தி வில்லேஜ்’ அமேசான் பிரைமில் வெளியாக உள்ளது. மேலும் ஆஹா ஓடிடியில் ‘டெமன்’ மற்றும் சோனி லைவ் ஓடிடியில் ‘சத்திய சோதனை’ ஆகிய தமிழ் திரைப்படங்கள் இந்த வாரம் ஓடிடியில் வெளியாக உள்ளது.

குணசேகரன் முன்னாள் காதலியிடம் உதவி கேட்கும் ஜனனி.. ஞானத்தை கிழித்து தொங்கவிட்ட தர்ஷன்

தமிழ் திரைப்படங்களை தொடர்ந்து நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ஐஸ்வர்யா ராஜேஷ், ஜோஜு ஜார்ஜ், லிஜிமோல் ஜோஸ் உள்ளிட்டவர்கள் இணைந்து நடித்திருக்கும் ‘புலிமாடா’ என்ற மலையாளப் திரைப்படம் மற்றும் சோனி லைவ் ஓடிடியில் ‘சாவர்’, ‘மேட் இன் காரவன்’ என்ற படம் ஹெச்.ஆர் ஓடிடியில் மற்றும் சைனா பிளே ஓடிடியில் ‘குடுக்கு 2025’ உள்ளிட்ட மலையாள திரைப்படங்கள் வெளியாக உள்ளது. அதோடு மட்டுமல்லாமல் ஜியோ சினிமாவில் ‘குட் ஓல்ட் டேய்ஸ்’ என்ற தெலுங்கு படமும் இந்த வாரம் வெளியாகிறது.