வெளியே போவது நீங்கதான்… வாங்க பேசலாம் பிக் பாஸ் வீட்டில் யாரை அழைத்துள்ளார் கமல் தெரியுமா.?

bigg boss tamil season 7 promo : பிக் பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு வந்து இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது இந்த நிலையில் டிக்கெட் டு பினாலே போட்டியில் விளையாடி விஷ்ணு இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார் அவரை தொடர்ந்து சக போட்டியாளர்களும் அடுத்தடுத்து இருக்கிறார்கள்.

இந்த நிலையில் பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு வெளியே செல்வது யார் என்று எதிர்பார்ப்பு கடந்த வாரம் இருந்த நிலையில் விசித்ரா தான் எடுத்து செல்வார் எனக் கூறப்பட்டது, ஆனால் கடைசியாக பூர்ணிமா பணப்பெட்டியை 16 லட்சத்தை எடுத்து சென்றார் அவர் வெளியே சென்றவுடன் கேப்டன் விஜயகாந்த் சமாதியை பார்க்கச் சென்றார் அதனைத் தொடர்ந்து வீட்டிற்கு வந்த பூர்ணிமாவை அவர்களது வீட்டாளர் கோலாகலமாக வரவேர்த்தார்கள்.

தனுஷை தூக்கி நிறுத்த போகும் கேப்டன் மில்லர்.! எதிர்பார்ப்பை எகிற வைக்க ரிலீஸ் தேதியுடன் வெளியானது ட்ரெய்லர்..

இந்த நிலையில் அடுத்ததாக வீட்டை விட்டு யார் வெளியே செல்ல போகிறார் என்று எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்தது அதேபோல் இரண்டு நபர் வெளியே செல்வார்கள் என கூறப்பட்ட நிலையில் தற்பொழுது ஒரே ஒரு நபர் தான் வெளியே செல்ல இருக்கிறார் தகவல் வெளியானது . இந்த நிலையில் புதிய ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது இந்த ப்ரோமோ வீடியோவில் கமலஹாசன் உள்ளே உள்ள போட்டியாளர்களிடம் அடுத்ததாக யார் இரண்டு பேர் வெளியே செல்ல போகிறார்கள் என கேள்வி எழுப்பினார்.

அவர்கள் சில நபர்களை கூறிக் கொண்டிருக்கிறார்கள் இந்த நிலையில் திடீரென ஒரு போட்டியாளர் விசித்திரா நீங்க உள்ளே இருங்க என பேச அப்போ வெளியே அனுப்ப போவதை நீங்கதான் முடிவு செய்கிறீர்களா என கமல் கேள்வி எழுப்புகிறார்.

தப்பு பண்ணிடிங்களே மேடம்.. வீட்டை விட்டு வெளியேறிய விசித்ராவின் முழு சம்பளம் எவ்வளவு தெரியுமா.? சோனமுத்தா போச்சா

இந்த நிலையில் கமல் தன்னுடைய பாக்கெட்டில் இருந்து ஒரு கார்டை எடுத்து காட்டுகிறார் இதனால் சக போட்டியாளர்கள் அதிர்ச்சி அடைகிறார்கள் ஒருவேளை கமல் வெளியே அனுப்பப் போவது விசித்திரா தான் என ஏற்கனவே சமூக வலைதளத்தில் தகவல் வைரல் ஆகி வருகின்ற நிலையில் விசித்திராவும் அதிர்ச்சி அடைகிறார் இத்துடன் இந்த ப்ரோமோ வீடியோ முடிகிறது.