தப்பு பண்ணிடிங்களே மேடம்.. வீட்டை விட்டு வெளியேறிய விசித்ராவின் முழு சம்பளம் எவ்வளவு தெரியுமா.? சோனமுத்தா போச்சா

Bigg Boss Vichithra Salary: பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விசித்ரா வெளியேறி இருக்கும் நிலையில் அவருடைய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. கவர்ச்சி நடிகையாக தமிழ், மலையாளம் என கலக்கி வந்த விசித்ரா ஒரு கட்டத்தில் நடிப்பதை நிறுத்திவிட்டு திருமணம் செய்துக் கொண்டு செட்டில் ஆனார்.

இவருக்கு தற்பொழுது மூன்று ஆண் பிள்ளைகள் இருக்கும் நிலையில் சினிமா பக்கம் திரும்பாமல் இருந்த இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதனை தொடர்ந்து விரைவில் நிறைவடைய இருக்கும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியிலும் பங்கு பெற்றார்.

தனுஷை தூக்கி நிறுத்த போகும் கேப்டன் மில்லர்.! எதிர்பார்ப்பை எகிற வைக்க ரிலீஸ் தேதியுடன் வெளியானது ட்ரெய்லர்..

பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் 50 வயதை கடந்தவர்கள் இதுவரையிலும் போட்டியின் இறுதிவரை சென்றதே கிடையாது சில வாரங்களிலேயே பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள். ஆனால் விசித்ரா தான் தன்னுடைய டஃப் கொடுத்து இறுதி கட்டம் வரை பிக் பாஸ் வீட்டில் இருந்தார்.

கவர்ச்சி நடிகையாக பிக் பாஸ் 7 கலந்துக் கொண்ட விசித்ரா 95  நாட்களில் தனது மொத்த பெயரையும் மாற்றி பட்டித்தொட்டி எங்கும் பிரபலமாகியுள்ளார். இவ்வாறு தரமான போட்டியாளராக இருந்த இவர் பிக் பாஸ் 7ன் டைட்டில் வின்னராக அதிக தகுதி இருக்கிறது என கூறப்பட்டு வந்தது ஆனால் இந்த வாரம் எலிமினேட் செய்யப்பட்டுள்ளார்.

புத்தாண்டு பார்ட்டியில் எசக்கு பசக்காக விளையாடிய நடிகை.! பார்க்கக் கூடாததை பார்த்ததால் பயந்து ஓடிய டிரைவர்..! அப்பறம் என்ன மிரட்டல் தான்

ஒரு நாளைக்கு விசித்ராவுக்கு ரூபாய் 40 ஆயிரம் சம்பளம் என பேசப்பட்டதாம் 95 நாட்களுக்கு மேல் பிக் பாஸ் வீட்டில் இருந்த இவருக்கு மொத்தமாக ரூபாய் 35 லட்சத்திற்கு மேல் சம்பளம் வாங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக பிக் பாஸ் சீசன் 7ல் அதிக சம்பளம் வாங்கும் போட்டியளராக விசித்ரா விளங்கும் நிலையில் விரைவில்  இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.