பிரதீப்பை வெளியே அனுப்பிவிட்டு சந்தோஷத்தில் இருந்த போட்டியாளர்களுக்கு கமல் கொடுத்த அதிர்ச்சி

Bigg Boss 7 Promo : விஜய் டிவியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் 7 வது நிகழ்ச்சியில் நேற்று யாரும் எதிர்பார்க்காத விதமாக பிரதீப் ஆண்டனி ரெட் கார்ட் பெற்று வெளியேறினார்.. பிக்பாஸ் வீட்டில் இருக்கும் பூர்ணிமா, மாயா, ஜோவிகா, விஷ்ணு, விக்ரம், மணி, நிக்சன், கூல் சுரேஷ் போன்ற சிலர் பிரதீப் ஆண்டனி நடவடிக்கை சரியில்லை..

அவருக்கு ரெக்கார்டு கொடுத்து பிக்பாஸ் வீட்டை விட்டு அனுப்ப வேண்டும் என கோரிக்கை வைத்ததால் அதனை ஏற்றுக் கொண்டு கமலும் பிரதீப்பை வெளியேற்றினார். இந்த நிலையில் சென்ற வாரம் வைல்டு கார்டு என்ட்ரியாக அன்ன பாரதி, அர்ச்சனா, தினேஷ், கானா பாலா, ப்ராவோ போன்ற ஐந்து போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்கு வந்திருந்தனர்.

குடல் காய்ந்தால் குதிரையும் வைக்கோல் தின்னும்.. சூர்யா குறித்து அந்தர் பல்டி அடித்த பாலா

வீட்டுக்கு வந்த அடுத்த நாளே கேப்டன் பூர்ணிமா 5 பேரையுமே ஸ்மால் பாக் வீட்டிற்கு அனுப்பினார்.. இது வைல்ட் கார்டு போட்டியாளர்களை கடுப்பாக்கியது.. மேலும் அர்ச்சனாவால் இதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.. தப்பு பண்ணிட்டு ஸ்மால் பாக்ஸ் வீட்டிற்கு வந்தால் பிரச்சனை இல்லை வைல்டு கார்டு என்பதால் நம்மளை வந்த உடனே இந்த வீட்டிற்கு அனுப்பி விட்டார்களே என செம்ம கோபத்தில் இருந்தார்.

இந்நிலையில் இன்றைய பிக் பாஸ் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.. அதில் கமல் அல்வா கொடுக்கிறது கேள்விப்பட்டிருப்பீங்க இது பாவக்காய் அல்வா அந்த அல்வாக்கு தகுதி பெற்றவர்கள் யார் என்று தேர்ந்தெடுத்து சொல்லுங்கள் என சொல்ல அர்ச்சனா.. பூர்ணிமா மற்றும் மாயாவுக்கு வந்த உடனே என்ன ஸ்மால் பாக்ஸ் வீட்டிற்கு அனுப்பிட்டாங்க என பாவக்காய்  அல்வா கொடுக்கிறார்.

எவ்வளோ பண்ணிட்டோம் இத பண்ண மாட்டோமா.. லியோ திரைப்படம் இதுவரை அள்ளிய வசூல் எவ்வளவு தெரியுமா.?

கடைசியாக அர்ச்சனாவுக்கு பாவக்காய் அல்வா கொடுக்கின்றனர். பிறகு கமல் அர்ச்சனாவிடம் எந்த எக்ஸ்படேஷன்ல இந்த வீட்டுக்கு வந்தீங்க என்று கேட்க அர்ச்சனா நான் வரும்போது நோ எக்ஸ்படேஷன்ல தான் வந்தேன் என்று சொல்ல அப்புறம் எதுவா இருந்தாலும் ஏத்துக்க வேண்டியது தானே என கமல் சொல்லும் ப்ரோமோ வெளியாகியிருக்கின்றன.