Baakiyalakshmi Promo : உங்களுக்கு துரோகம் பண்ணவங்கள விட்டு விலகி தானே இருந்தீங்க.. நான் மட்டும் உங்க பையன் கூட சேர்ந்து வாழனுமா.. பாக்கியாவை கேள்வி கேட்ட ஜெனி

Baakiyalakshmi serial November 12 promo : பாக்கியலட்சுமி சீரியலில் சமீபத்திய எபிசோடுகளில் செழியன் உடைய வண்டவாளத்தை வீடு தேடி வந்து மாலினி புட்டு புட்டு வைத்து குடும்பத்தில் பெரிய ரகளை ஏற்படுத்தியுள்ளார். இதனால் கோபப்பட்ட ஜெனி உன் கூட இனி ஒரு நிமிஷம் கூட என்னால இருக்க முடியாது என்று குழந்தையை தூக்கிக் கொண்டு அவங்க அம்மா வீட்டிற்கு சென்று விட்டார்.

பிறகு இதற்கெல்லாம் காரணம் நீ தான், உனக்கு ஏற்கனவே தெரிந்திருந்தும் எங்க கிட்ட மறைச்சது உன் தப்பு என்று ஈஸ்வரி பாக்யாவை திட்ட அதற்கு ராதிகா தப்பு பண்ணது உங்க பேரன் செழியன் சம்பந்தமே இல்லாம பாக்யாவை திட்டறீங்க இன்று சப்போர்ட் பண்ணி பேசினார். பிறகு ஜெனி வீட்டிற்கு வந்து செழியன் கெஞ்சி கதறி என்ன மன்னிச்சிடு ஜெனி வீட்டுக்கு வா என்றெல்லாம் கூப்பிட்டு பார்த்தார்.

இது கிரிக்கெட் போட்டி இல்ல வார்.. புதிய லுக்கில் தெறிக்கவிடும் தலைவர் – லால் சலாம் டீசர்

ஆனால் ஜெனி வரவில்லை இந்த நேரத்தில் பாக்கியலட்சுமி அடுத்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது அதில் செழியனை கூட்டிக்கொண்டு ஈஸ்வரியும், பாக்கியாவும் ஜெனி இடம் சமாதானம் பேச வந்திருக்கின்றனர்.. அப்பொழுது ஜெனி உடைய அம்மா உங்களை எல்லாம் நம்பி தானே கல்யாணம் பண்ணி கொடுத்த, என் பொண்ணோட மொத்த வாழ்க்கையும் கெடுத்துட்டீங்க..

தயவுசெய்து வீட்டை விட்டு வெளியே போங்க என்று ஈஸ்வரி மற்றும் பாக்கியாவிடம் சத்தம் போடுகிறார். பிறகு பாக்கியா ஜெனி கிட்ட நடந்தது ஒன்னும் சொல்லிக்கிற அளவுக்கு இல்ல என்று சொல்ல வரும் பொழுது ஜெனி நீங்க எது சொன்னாலும் நான் கேட்கிற மாதிரி இல்லை.. என்னோட நிலைமையில நீங்களும் இருந்திருக்கீங்க.

ஜெயிலில் இருந்து வெளியே போறதை யோசிக்க கூடாது நாம பண்ண தப்புல இருந்து எப்படி வெளிய வரணும்னு யோசிக்கணும்.. வெளியானது ஜெயம் ரவியின் சைரன் டீசர்…

உங்களுக்கு துரோகம் பண்ணவங்கள நீங்க விட்டு விலகி தான இருந்தீங்க.. இப்ப என்ன மட்டும் அங்க எதுவுமே நடக்காத மாதிரி மறந்துட்டு வந்து வீட்ல இருக்க சொல்றீங்க உங்களுக்கு வந்தா அது பிரச்சனை, எனக்கு வந்தா ஒண்ணுமே இல்லையா என்று ஜெனி பாக்யாவை கேள்வி கேட்கும் ப்ரோமோ வெளியாகி இருக்கின்றன..