ஜெயிலில் இருந்து வெளியே போறதை யோசிக்க கூடாது நாம பண்ண தப்புல இருந்து எப்படி வெளிய வரணும்னு யோசிக்கணும்.. வெளியானது ஜெயம் ரவியின் சைரன் டீசர்…

Siren Movie Teaser: தீபாவளி ஸ்பெஷல் ஆக ஜெயம் ரவியின் சைரன் பட டீசர் வெளியாகி உள்ளது அறிமுக இயக்குனர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில உருவாகி இருக்கும் சைரன் படம் விரைவில் வெளியாக உள்ளது. சைரன் படத்தின் படப்பிடிப்புகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அதற்கான பணிகளில் ஜெயம் ரவி ஈடுபட்டு வருகிறார்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் ஜெயம் ரவியின் அகிலன் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. இதனைத் தொடர்ந்து பொன்னின் செல்வன் திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த படமும் பிளாக்பஸ்டர் ஹிட்டடித்தது. இந்த வருடம் ஜெயம் ரவிக்கு சிறப்பாக அமைந்தது.

ஜுவல்லரி டிசைன் போட்டியில் ஜெயித்து சூர்யாவை பெருமைப்படுத்திய மகா.. ஆஹா கல்யாணம் இன்றைய எபிசோட்

ஆனால் கடைசியாக நடித்திருந்த இறைவன் திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. இதனை அடுத்து தற்பொழுது ஜெயம் ரவி நடிப்பில் சைரன் படம் உருவாகியுள்ளது. இதில் கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடிக்க அனுபவம் பரமேஸ்வரன் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.

டிசம்பரில் இந்திய அளவில் மிகவும் பிரம்மாண்டமாக இப்படம் வெளியாக உள்ளது. இந்நிலையில் தற்பொழுது சைலர் படத்தின் டீசர் வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதில் ஹை டிராமா மற்றும் தீவிரமான ஆக்சன் காட்சிகளுடன் உருவாகியுள்ளது. டீசர் கீர்த்தி சுரேஷ் குரலுடன் தொடங்குகிறது.