லியோ ட்ரெய்லர் கொஞ்சம் ஓரம்போங்க இதோ வந்து விட்டது சிவகார்த்திகேயனின் அயலான் டீசர்..

ayalaan teaser : தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன் இவர் ஆரம்பத்தில் சின்னத்திரையில் பல காமெடி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பிரபலமடைந்தவர் அதனைத் தொடர்ந்து சினிமாவில் நடிக்க ஆரம்பித்து தனக்கான ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார்.

கடைசியாக இவர் நடிப்பில் வெளியாகிய மாவீரன் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இன்று நேற்று நாளை திரைப்படத்தின் இயக்குனர் ரவிக்குமார் 2018 ஆம் ஆண்டு ஒரு கதையை சொன்னார் அந்த கதைக்கு அயலான் என திரைப்படத்தின் பெயரை வைத்தார்கள் சயின்ஸ் பிக்சன் ஜானரில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் கொரோனா ஊரடங்கு காரணமாக பல வருடங்களாக போஸ்ட் புரொடக்ஷனில் இருந்தது.

வெடல புள்ளையை வளைத்துப் போட்ட சிவகார்த்திகேயன் முருகதாஸ் கூட்டணி.! அம்முனி அக்கட தேசத்தில் டாப்போ டாப்

மேலும் இந்த திரைப்படத்தில் சுமார் 4500 க்கும் மேற்பட்ட கிராபிக்ஸ் காட்சிகள் பிருத்தியோகமாக உருவாக்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்த திரைப்படத்தை 24 ஏ எம் ஸ்டுடியோஸ் மற்றும் கே ஆர் ஸ்டுடியோஸ் தயாரிக்க ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.

சிவகார்த்திகேயனுடன் இணைந்து ரகுல் ப்ரீத் சிங், ஈஷா கோபிகர், சரத் கேல்கார், யோகி பாபு, கருணாகரன் ஆகியோர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள் இந்த நிலையில் தற்போது டீசர் வெளியிடப்பட்டுள்ளது டீசரை பார்க்கும் பொழுது மிரட்டலாக வந்துள்ளது.

முருகதாஸ் -க்கு பச்சைக்கொடி காட்டி தயாரிப்பாளர் தலையில் இடியை இறக்கிய சிவகார்த்திகேயன்.! இதுக்கு பேரு தான் ஊமகுத்தா

காலதாமதம் ஆனாலும் டீசரை பார்த்தவுடன் ரசிகர்களுக்கு பிடித்து போய்விட்டது அது மட்டும் இல்லாமல் கிராபிக்ஸ் காட்சிகள் அவ்வளவு தத்ரூபமாக வந்துள்ளன குறிப்பாக ஏலியனை படத்தின் கதாபாத்திரத்தில் ஒன்றாக இணைத்து மக்கள் நம்பும் படி கொண்டு வந்துள்ளார்கள், இது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது மேலும் படத்தை வருகின்ற பொங்கல் தினத்தில் வெளியிட இருக்கிறது படக்குழு மேலும் லால் சலாம் திரைப்படமும் பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கிறது.