வெடல புள்ளையை வளைத்துப் போட்ட சிவகார்த்திகேயன் முருகதாஸ் கூட்டணி.! அம்முனி அக்கட தேசத்தில் டாப்போ டாப்

Sivakarthikeyan: சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான் படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்திருக்கும் நிலையில் இதனை அடுத்து ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்தில் இணைந்துள்ளார். இந்த படத்தின் தகவல் கடந்த சில மாதங்களாகவே வெளியான நிலையில் தற்பொழுது இது குறித்து அதிகாரப்பூர்வமான அப்டேட்டை வெளியிட்டுள்ளனர்.

இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருடைய பிறந்தநாள் ஸ்பெஷல் ஆக சிவகார்த்திகேயன் வாழ்த்துக்களை தெரிவித்து தன்னுடைய 23வது படத்தை ஏ ஆர் முருகதாஸ் தான் இயக்க உள்ளார் என்பதை உறுதி செய்துள்ளார்.

சமீப காலங்களாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்து வரும் நிலையில் கண்டிப்பாக ஏ ஆர் முருகதாஸ், சிவகார்த்திகேயன் கூட்டணி வெற்றி படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்த சிவகார்த்திகேயன் இந்த படம் தனக்கு மிகவும் ஸ்பெஷல் ஆன படம் என்றும் உங்களுடன் இணைந்து பணியாற்றுவதில் நான் மிகவும் ஆர்வத்துடன் இருக்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.

sivakarthikeyan 23
sivakarthikeyan 23

இதன் மூலம் இவர்களுடைய கூட்டணி ஊறுதி செய்யப்பட்டு இருக்கும் நிலையில் மேலும் சிவகார்த்திகேயன் 23வது படத்தில் யார் ஹீரோயினாக நடிக்க இருக்கிறார் என்பது குறித்தும் தெரியவந்துள்ளது. அதாவது சீதாராமம் என்ற படத்தின் மூலம் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமாகி இருக்கும் நடிகை மருணாள் தாகூர் தான் நடிக்க இருக்கிறாராம்.

இவ்வாறு அதிரடி ஆக்சன் என்டர்டைன்மெண்ட் படமாக உருவாக இருக்கும் இந்த படத்தினை தெலுங்கு தயாரிப்பாளர் ஒருவர் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனை அடுத்து இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.