முருகதாஸ் -க்கு பச்சைக்கொடி காட்டி தயாரிப்பாளர் தலையில் இடியை இறக்கிய சிவகார்த்திகேயன்.! இதுக்கு பேரு தான் ஊமகுத்தா

Sivakarthikeyan : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வருபவர் சிவகார்த்திகேயன் இவர் நடித்த மாவீரன் திரைப்படம் பெரிய வெற்றியை பதிவு செய்த்தை தொடர்ந்து கமல் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் எஸ் கே 21 படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார்.

படத்தின் ஷூட்டிங் காஷ்மீர் பகுதிகளில் படமாக்கப்பட்டு வருகிறது படம் முழுக்க முழுக்க உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இருக்கும் என தகவல்கள் கசிகின்றன. அடுத்து சிவகார்த்திகேயன் யாருடன் இணைய போகிறார் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகரித்து காணப்பட்டன. அதற்கும் விடை கிடைத்துள்ளது.

ஏற்கனவே சிவகார்த்திகேயன் முருகதாஸை சந்தித்த புகைப்படங்கள் வெளியாகி நிலையில் ஆனால் இவர்கள் கூட்டணி அப்பொழுது உறுதிப்படுத்தப்படவில்லை ஆனால் அந்த சமயத்தில் படத்தின் கதை பற்றிய தகவல்கள் வெளியாகிறது அதாவது முருகதாஸ் சிவகார்த்திகேயன் இணையும் படம் முழுக்க முழுக்க சூப்பர் ஹீரோ சப்ஜெக்டில் இருக்கும் என பேச்சுக்கள் அடிபட்டன..

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் ஏ ஆர் முருகதாஸ் இணைவது உறுதியாக உள்ளது.  சிவகார்த்திகேயன் தனது டுவிட்டர் பக்கத்தில் ஏ ஆர் முருகதாஸின் 49 வது பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்லி உள்ளதோடு மட்டுமல்லாமல் அவருடன் இணைவதையும் உறுதிப்படுத்தி இருக்கிறார்.

sivakarthikeyan ar murugadoss movie 2
sivakarthikeyan ar murugadoss movie 2

இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் சுமார் 40 லிருந்து 45 கோடி வரை சம்பளம் கேட்டு இருக்கிறார் என கூறப்படுகிறது ஆனால் இதற்கு முன்பு அவர் 25 கோடி 30 கோடி தான் சம்பளம் வாங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. சிவகார்த்திகேயன் 40 கோடி சம்பளத்திற்கு தயாரிப்பு நிறுவனம் ஓகே சொல்லி உள்ளதாம் மேலும் படத்தின் மொத்த பட்ஜெட் சுமார் 150 கோடியிலிருந்து 200 கோடி வரை இருக்கும் என சொல்லப்படுகிறது.