shivani

வாத்தி பாடலுக்கு செம்ம குத்தாட்டம் போட்ட ஷிவானி நாராயணனன் வைரலாகும் வீடியோ!!

தமிழ் சினிமாவில் நடிகர், நடிகைகளுக்கு எப்படி ரசிகர் பட்டாளம் உண்டோ அதேபோல சீரியல்களில் நடித்து வரும் நடிகர் நடிகைகளுக்கும் ரசிகர்கள் உண்டு என்பதே நிதர்சனமான உண்மை. அந்த வகையில் பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடர் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் சிவானி நாராயணன்.

இதனைத் தொடர்ந்து அவர் பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம் போன்ற சீரியல்களில் மட்டும் நடிக்காமல் ஜோடி பன் அன்லிமிட்டட் நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து அவர் பிரபல தொலைக்காட்சியான ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தனது இரட்டை நடிப்பை வெளிப்படுத்தும் விதமாக இரட்டை ரோஜா என்ற சீரியலில் தற்பொழுது நடித்து பிரபலம் அடைந்து வருகிறார்.

சின்னத்திரை மூலம் அதிக ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டவர்களில் இவரும் ஒருவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சமூகவலைதளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் தனது க்யூட்டான புகைப்படத்தை வெளியிட்டு வருவதை வழக்கமாக கொண்டவர்.

இந்தநிலையில் தற்போது விஜய் நடிப்பில் வெளிவரவுள்ள மாஸ்டர் படத்தின் வாத்தி கம்மிங் பாடலுக்கு டான்ஸ் ஆடியுள்ளார் சிவானி நாராயணன். அத்தகைய வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது

இதோ வந்த வீடியோ

shalu shamu

144 போட்டா தான்யா உண்மையான ஃபேஸ் பார்க்கமுடியுது.. ஃபாரின் வெக்கேஷன் போலயா ஷாலு வீடியோவை பார்த்து ரசிகர்கள்.!

தமிழ் சினிமாவில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமடைந்தவர் ஷாலு ஷம்மு, இவர் வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்து மிகவும் பிரபலம் அடைந்தார், இதனைத்தொடர்ந்து சகலகலா வல்லவன், தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் ஆகிய திரைப்படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார்.

இவர் பெரும்பாலும் ஹீரோயினுக்கு தோழியாக தான் பல படங்களில் நடித்துள்ளார், மேலும் இவர் தாவணி பாவாடை அணிந்து குடும்ப குத்து விளக்கு போல் தான் பல திரைப்படங்களில் நடித்துள்ளார் ஆனால் சமீபகாலமாக பட வாய்ப்புக்காக கவர்ச்சி காட்டி புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.

அதுமட்டுமில்லாமல் சில மோசமான நடன வீடியோவை வெளியிட்டுள்ளார், இந்த நிலையில் கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது, அதே போல் தமிழகத்திலும் பரவி வருகிறது, பல சினிமா பிரபலங்கள் கொரோனா வைரஸ் பற்றி விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டார்கள். அதுமட்டும் இல்லாமல் 144  தடை உத்தரவு இந்தியா முழுவதும் போடப்பட்டுள்ளது அதனால் பல பிரபலம் வீட்டிலேயே இருக்கும் படி அறிவுறுத்துகிறார்கள் அந்த வகையில் நடிகை ஷாலு ஷம்முவும் தற்போது வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோவை பார்த்து பல ரசிகர்கள் கிண்டல் அடித்து வருகிறார்கள், சில ரசிகர்கள்

https://www.facebook.com/tamil360newz/videos/676882759741009/

ஷாலு
ஷாலு
sathish

கல்யாணம் ஆனாலும் இப்படி நாய் கூட …? சதீஷ் வீடியோவை பார்த்து காளைக்கும் ரசிகர்கள்!!

தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக வலம் வருபவர் சதீஷ். 2010 ஆம் ஆண்டு சிவா நடிப்பில் வெளிவந்த தமிழ் படம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகம் ஆனார் இதனைத் தொடர்ந்து அவர் மதராசபட்டினம், தாண்டவம் வத்திகுச்சி, எதிர்நீச்சல், சிகரம்தொடு, கத்தி ,ஆம்பள, தங்கமகன், இரக்க ,பைரவா என பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

சதீஷ் இதன்மூலம் மக்கள் மற்றும் ரசிகர் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார்.இதனைத் தொடர்ந்து அவர் தமிழ் சினிமாவில் நிலையான ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார். தற்பொழுது சதீஷ் முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து வருகிறார் இந்தநிலையில் சதீஷ் அவர்கள் சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.

மாப்பிள்ளையான சதீஷ் அவர்கள் இந்திய ஆணியின் முன்னாள் சுழற் பந்துவிச்சாளர் ஹர்பஜன் சிங்க்வுடன் பிரண்ட்ஷிப் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.    தற்பொழுது கொரோனா வைரஸ் காரணமாக படப்பிடிப்பு தடைசெய்யப்பட்டது. இதனால் வீட்டிலேயே முடங்கி உள்ள சதீஷ் அவர்கள் தன்னுடைய நாயுடன் இருக்கும் வீடியோவை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு தான் கல்யாணம் ஆயிடுச்சி அப்புறம் ஏன் நாய் கூட என அவரை கிண்டல் செய்து வருகின்றனர்.

இதோ அந்த வீடியோ

cho

சீனாவை பற்றி அப்பொழுதே கூறிய ‘சோ’ வைரலாகும் வீடியோ.!

கொரோனா வைரஸினால் உலகமே எப்பொழுது தடுமாறிக் கொண்டிருக்கிறது அந்த அளவிற்கு தற்போது பரவி  கொண்டிருக்கிறது.தற்பொழுது சீனாவைத் தொடர்ந்து இத்தாலி, ஈரான்,இங்கிலாந்து ,ஸ்பெயின், அமெரிக்கா ,இந்தியா மற்றும் பல நாடுகளில் தற்போது பரவிக்கொண்டிருக்கிறது.

கொரோனா வைரசுக்கு எதிர்வினையாற்றும் மருந்தை உலக சுகாதார அமைப்பும் மற்ற நாடுகளும் தற்பொழுது ஆராய்ந்து வருகின்றனர். இதுவரை கொரோனா வைரசினால் ஆயிரக்கணக்கான பேர் உயிரிழந்து உள்ளனர். வைரஸை அழிக்க முடியாததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் தற்பொழுது அரசும் மற்றும் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தியாவிலும் தற்பொழுது பரவி உள்ளது. இதனால் பல மாநிலங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன அதிலும் குறிப்பாக தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பினால் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. இந்தியாவில் தற்பொழுது 144 தடை உத்தரவு ஏப்ரல் 15 வரை பிறப்பிக்கப்பட்டுள்ளது. சீனாவினால் ஒட்டுமொத்த உலகமும் தற்பொழுது நிலை தடுமாறியுள்ளது.

சினிமா உலகில் மிகவும் பிரபலமானவர் நடிகர் சோ ராமசாமி. பன்முகத்தன்மை கொண்டவராக விளங்கியவர். இவர் பத்திரிகை ஆசிரியர், நாடகாசிரியர் ,வக்கீல் என பல்வேறு பொறுப்புகளை திறம்பட மேற்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது அதுமட்டுமில்லாமல் வாரப் பத்திரிக்கையான துக்ளக் என்ற பத்திரிகையை நடத்தி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை இவர் 200க்கும் படங்களில் நடித்துள்ளார்.

சோ அவர்கள் சீனா பற்றி சில ஆண்டுகளுக்கு முன்பே சொல்லியிருந்தார் தற்போது அந்த வீடியோ சமூக வலைதளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது. சீனா அடிக்கடி இந்தியாவின் மீது படையெடுத்து கொண்டிருக்கும் அதுமட்டுமில்லாமல் அருணாச்சலப்பிரதேசம் எங்களது என்று சொல்லி பெரிய ஆர்ப்பாட்டம் செய்து இருந்தது சீனா என அவர் குறிப்பிட்டிருந்தார்.

பார்டர் விஷயத்தில் சீனாவை விட மோசமாக நடந்து கொள்ள வேறு எந்த நாடும் இருக்காது. ஆனால் இன்றும் இந்தியா சீனா நல்ல உறவில் இருக்க வேண்டும் என பலர் தயாராகி இருக்கின்றனர் என்னை பொருத்தவரை சீனாவை அமுக்கிவிட்டு அமெரிக்காவுடன் உயர்த்தி இருக்க வேண்டும் என கூறியிருந்தார்.மேலும் சீனா எப்பொழுதும் இந்தியாவிற்கு பல இடைஞ்சல்களை தருமே தவிர வேறு எந்த நன்மையும் கிடையாது என அவர் தெரிவித்திருந்தார் இது போன்று மேலும் அவர் பல சுவாரஸ்யமான விஷயங்களை நம்முடன் பகிர்ந்துள்ளார்

சோ அவர்களின் சுவாரஸ்யமான வீடியோ இதோ