கொரோனாவை என் கண்ணு முன்னாடி காட்ட சொல்லுங்க என பிடிவாதம் பிடித்த இளைஞர்.! காட்டு காட்டுன்னு காட்டிய போலீஸ்காரர்கள்.! வைரலாகும் வீடியோ.

சீனாவில் வுஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் படிப்படியாக பரவி அமெரிக்கா, இத்தாலி, இங்கிலாந்து, ஈரான், ஸ்பெயின், சிங்கப்பூர், மலேசியா என 160க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியது. இந்த வைரஸ் இந்தியாவிலும் மிக வேகமாக பரவி வருகிறது அதனால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த ஊரடங்கு உத்தரவை ஒரு சில மனிதர்கள் பொருட்படுத்தாமலும் பின்படுத்தாமலும். ஊர் சுற்றி வருகிறார்கள் அதுமட்டுமில்லாமல் வைரஸ் பற்றி கொஞ்சம் கூட பயமே இல்லாமல் வாகனங்களிலும் சுற்றித் திரிகிறார்கள், அதனால் இப்படி சுற்றித்திரியும் இளைஞர்களை போலீஸ் அதிகாரிகள் தடியடி நடத்தியும் தோப்புக்கரணம் போடும் வீட்டுக்கு செல்லுமாறு அறிவுறுத்தி வருகிறார்கள்.

அப்படித்தான் அறந்தாங்கியில் ஒரு இளைஞன் சுற்றித்திரிந்துள்ளான் அவனை பிடித்து போலீஸ் வீட்டிற்கு செல்லும்படி கூறி உள்ளார்கள் அதற்கு அந்த இளைஞன் கொரோனா எதுவுமே இல்லை சி எம் ஐ என் கோட்டைக்கு வந்து கொரோனாவை என் கண்ணுல காட்ட சொல்லுங்க என போலீசிடம் வாக்குவாதம் செய்தனர்.

அதன் பின்னர் அந்த இளைஞரை குண்டுகட்டாக தூக்கி சென்று போலீஸ் ஸ்டேஷனில் போதுமென்ற அளவிற்கு காட்டு காட்டுன்னு காட்டிய அனுப்பி வைத்துள்ளார்கள்.
இதோ அந்த வீடியோ.

Leave a Comment